Kamal Haasan:எனக்கு அம்புட்டு சந்தோஷம்; அண்ணனுக்கும், தம்பிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்! - கமல்ஹாசன்
Kamal Haasan: “இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்” - கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் மற்றும் இளையராஜா ஆகியோர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அண்ணன் - தம்பிக்கு வாழ்த்து
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது.
இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்... பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன்.எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு:
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படமானது அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், “ இது நீளமான கதை. எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. இயக்குநர் ஷங்கர் அடைந்திருக்கும் உயரம் அதிர்ஷ்டமோ, விபத்தோ இல்லை. அன்று பார்த்த அதே துடிப்புடன் இன்றும் இருக்கிறார்.
ஷங்கர் ஒரு கதையை என்னிடம் வந்து சொன்ன போது, அதன் சித்தாந்தத்தில் எனக்கு உடன் பாடில்லை. ஆகையால் நான் அதில் நடிக்கவில்லை என்று சொல்லி விட்டேன். ஆனால், அதன் பின்னரும் ஷங்கர் என்னை தேடி வந்தார். அப்போது நான் மறைந்த நடிகர் சிவாஜி சாரை வைத்து படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருந்தேன். அப்போது அதே போன்ற கதையை ஷங்கர் என்னிடம் சொன்னார். இதனை சிவாஜி சாரிடம் சொன்ன போது நீ சொன்ன கதையில் மகன் நீ, அப்பா நான். ஆனால் ஷங்கர் சொன்ன கதையில் அப்பாவும் நீ, மகனும் நீ ஆகையால் அந்தப்படத்தில் நடி என்று சொன்னார்.
நான் பலரிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டதால்தான் இன்று ரசிகர்கள் முன்னாடி நிற்கிறேன். இந்தப்படத்திற்கு பல தடைகள் வந்தன. என்னுடன் இந்தப்படத்தில் உதயநிதி உறுதுணையாக நின்றது போல, அவரோடு நான் உடன் நிற்கும் நேரம் வரலாம். என் வயசை விட 15 வயசுதான் இந்தியன் தாத்தாவுக்கு அதிகம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவில் நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது.ஸ்ருதி மனசு வச்சிருந்தா இப்போதே தாத்தாதான்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்