‘பிள்ளையார் பட்டி வந்த சசிக்குமார்.. பிள்ளைகளுடன் சூழ்ந்த பக்தர்கள்..’ நெகிழ்ந்து போன சூப்பர் தருணம்!
முகம் சுழிக்காமல், சசிக்குமார் அனைவரிடத்திலும் பண்பாக நடந்து கொண்டதால், அவரை அங்கிருந்த பக்தர்களும் உற்சாகப்படுத்தினர். சிலர் தங்களின் குழந்தையை சசிக்குமாரிடம் கொடுத்து, அவரிடம் பெயர் வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று புதன்கிழமை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டது. கற்பக விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழக முழுவதும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சசிக்குமாருடன் மகிழ்ந்த பக்தர்கள்
இந்நிலையில் இன்று நண்பகல் தரிசிக்க வந்த திரைப்பட நடிகர் இயக்குனருமான சசிகுமார் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசனம் செய்தார். அப்போது அவரை கண்ட பக்தர்கள், மகிழ்ச்சியடைந்தனர். அனைவரும் சசிக்குமாருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அனைவரின் அன்பையும் ஏற்றுக் கொண்ட சசிக்குமார், தொடர்ந்து தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பாதுகாப்பு பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முகம் சுழிக்காமல், சசிக்குமார் அனைவரிடத்திலும் பண்பாக நடந்து கொண்டதால், அவரை அங்கிருந்த பக்தர்களும் உற்சாகப்படுத்தினர். சிலர் தங்களின் குழந்தையை சசிக்குமாரிடம் கொடுத்து, அவரிடம் பெயர் வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அனைவரின் அன்பையும் அவர் வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டார்.