ஓடிடியை கலக்க வரும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்.. இன்னும் 3 நாள் தான்.. வெயிட்டிங் எல்லாம் ஓவர்
சந்தானத்தின் தில்லுக்கு துட்டு படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஓடிடியை கலக்க வரும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்.. இன்னும் 3 நாள் தான்.. வெயிட்டிங் எல்லாம் ஓவர்
‘தில்லுக்கு துட்டு’ தொடரின் நான்காவது பாகமாக உருவாகியுள்ள படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. மாறுபட்ட கதைக்களத்துடன் வந்த தமிழ் ஹாரர் த்ரில்லர் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது. டிடி நெக்ஸ்ட் லெவல் பிரபலமான டிஜிட்டல் பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது.
ஜூன் 13 ஆம் தேதி ஓடிடியில்
‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் மே 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்போது ஒரு மாதத்திற்குப் பிறகு ஓடிடியில் நுழையவுள்ளது. ஜீ5 ஓடிடியில் ஜூன் 13 அன்று இந்த திரைப்படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பார்வையாளர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது.