மர்மதேசம் செய்யுறப்போ வந்த வதந்தி.. சேத்தன் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிடுவார்.. தேவதர்ஷினி ஓபன் டாக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மர்மதேசம் செய்யுறப்போ வந்த வதந்தி.. சேத்தன் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிடுவார்.. தேவதர்ஷினி ஓபன் டாக்

மர்மதேசம் செய்யுறப்போ வந்த வதந்தி.. சேத்தன் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிடுவார்.. தேவதர்ஷினி ஓபன் டாக்

Marimuthu M HT Tamil
Oct 22, 2024 02:36 PM IST

மர்மதேசம் செய்யுறப்போ வந்த வதந்தி பற்றியும்; சேத்தன் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிடுவார் என்பது குறித்தும் நடிகை தேவதர்ஷினி ஓபன் டாக் ஆகப் பேசியுள்ளார்.

மர்மதேசம் செய்யுறப்போ வந்த வதந்தி.. சேத்தன் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிடுவார்.. தேவதர்ஷினி ஓபன் டாக்
மர்மதேசம் செய்யுறப்போ வந்த வதந்தி.. சேத்தன் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிடுவார்.. தேவதர்ஷினி ஓபன் டாக்

எல்லோரும் ஐந்தாம் வேதம் வெப் சீரிஸ்-க்கு காத்திருக்காங்க. அதுபற்றி?

பதில்: இயக்குநர் நாகா சார் உடன் நான் முதலில் வொர்க் செய்தது ‘மர்ம தேசம்’. அதன்பின் தான் ரமணி வெர்சஸ் ரமணி தொடரில் நடிச்சேன். மர்ம தேசம் போன்ற டிவி சீரியல்களில் கட்டுக்கதை, திரில், அமானுஷ்யம் இருக்கும். ஐந்தாம் வேதமும் கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு ஜானர் தான். நாகா சாரின் பேவைரட் ஜானர் அது.

காமெடி சினிமாவுக்கு வேண்டும் என்று சொல்லியிருக்கீங்க. அதை இந்த சிரீஸில் எதிர்பார்த்தீங்களா?

பதில்: ஸ்கிரிப்ட்டுக்கு ஸ்கிர்ப்ட் வித்தியாசம் ஆகுக் இல்லையா. ரொம்ப உண்மைபோலவே இருக்கும் இந்த கேரக்டர்கள் எல்லாம். மர்மதேசம் மாதிரியான கதை இல்லையா, அதனால் எனக்கு தான் நாகா சார் முதலில் கால் செய்து நடிக்க அழைத்தார். நாகா சாரின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது என்பதுவே என் வயது ஒத்த நடிகர்களுக்கு வரப்பிரசாதம். அதனால் அதை விடவில்லை.

வெகுநாட்களுக்குப் பின் மீண்டும் இணையும்போது, அப்போது திட்டு எல்லாம் வாங்கியிருப்பீங்க. அதை நினைவுகூர்ந்து கலாய்த்ததுண்டா?

பதில்: இயக்குநர் நாகா சார் திட்டவே மாட்டார். அவர்கிட்ட திட்டு வாங்க நாங்க ரொம்ப மெனக்கெடுவோம். ஏனென்றால், அவர் ரொம்ப க்ளோஸ் ஆன மட்டும் தான், கொஞ்சமாவது திட்டுவார். ’மர்மதேசம்’ ஒர்க் செய்யும்போது, சேத்தனை மட்டும் கொஞ்சமாக திட்டுவார். அவர் திட்டுற அதிகபட்ச வார்த்தை ‘முட்டாள்’ என்பது மட்டும் தான். ரொம்ப சொதப்பி இருந்தால்கூட என்னைப் பார்த்துட்டு ‘ஒன் மோர் போகலாமா’ அப்படின்னுதான் கேட்பார்.

இவ்வளவு நடிச்சு அனுபவம் ஆகிடுச்சு, இப்போது இருக்க தேவதர்ஷினி முதல் நாள் ஷீட்டிங்கில் இருக்கும் தேவதர்ஷினி கிட்டப்போய் சொல்லனும் என்றால் என்ன சொல்வீங்க?

பதில்: நீ எதையும் யோசிக்காதீங்க. முதலில் இயக்குநர் சொல்லும்படி கேட்டு நடி. அதன் பின் உங்களது நடிப்புத் திறமையைக் காட்டலாம். அதைவிட்டுட்டு எடுத்தவுடன், நான் அப்படி செய்யட்டா, இப்படி செய்யட்டான்னு சொல்லாத. ஆர்வக்கோளாறு மட்டும் வேண்டாம். முதலில் இயக்குநர் சொல்றதைக் கவனி. அதை உள்வாங்கிக்கோ. அதுவே போதுமானதாக இருக்கும்.

ஐந்தாம் வேதம் வெப்-சீரிஸில் உங்கள் பழைய கோ-ஆட்டிஸ்ட்கள் கூட நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: என்னுடைய ரோல் ஒரு தனி டிராக் மாதிரி வரும். எந்த நடிகர்கள் கூடயேயும் சேர்ந்து நடிக்கிற மாதிரி வராது. ஐந்தாம் வெப் சீரிஸில் நான் ஒரு வழக்கறிஞர். அதனால், என்னுடையது தனி டிராக்காக தான் வரும். அதனால், எனக்கு மிகக் குறுகிய நடிகர்களோடு தான், நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

விமர்சனங்களை சீரியஸாக எடுத்துக்கொள்வீர்களா?

பதில்: கண்டிப்பாக சீரியஸாக எடுத்துக்கொள்வேன். என் கணவர் சேத்தன் மற்றும் என் மகள் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்வேன். அவர் கொஞ்சம் முகத்தில் அடித்ததுபோல் சொல்வார். என் பொண்ணு பக்குவமாக சொல்வா. சில படங்களில் நாம் ஒன்று எதிர்பார்த்து போவோம். அது வேறு மாதிரி ஒர்க் அவுட் ஆகும் இல்லையா. அதை சினிமாவில் பார்க்கும்போது நமக்கு ஃபீல் ஆகும் இல்லையா. சேத்தன் மிக நேர்மையான விமர்சனத்தைச் சொல்லிவிடுவார். கொஞ்சம் ஓவராகப் பண்ணி இருக்கியே. மேக்கப் எவ்வளவு பண்ணியிருக்க அப்படின்னு சொல்லுவார்.

படம் பார்த்து அழுத படம் என்றால் அது என்ன படம்?  

பதில்:  96 திரைப்படம் பார்த்துட்டு தேம்பி தேம்பி அழுதேன். அதுக்காக ஸ்கூலில் லவ் இருக்கானு கேட்காதீங்க. ஏனென்றால், நான் படிச்சது கேர்ள்ஸ் ஸ்கூல்.

உங்களைப் பற்றி வந்த வதந்தி. அதைப் பார்த்து சிரிச்சிருக்கீங்களா?

பதில்: மர்மதேசம் செய்யும்போது தேவதர்ஷினியும் சேத்தனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறார்கள் அப்படின்னு கிசுகிசு வந்தது. அதை வதந்தின்னு சொல்லிக்கிட்டோம். அதைப் பார்த்துட்டு ஆக இப்படி பண்ணீட்டாங்களேன்னு தோணுச்சு. அது ஒரு சின்ன பக்கத்தில் வந்ததால் யாரும் கவனிக்கல'’ என நடிகை தேவதர்ஷினி சொல்லி முடித்தார்.

நன்றி: பிஹைண்ட்வுட்ஸ்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.