தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Devayani Rajakumaran: ‘தேவயானிட்ட குழந்தையே வேணாம்னு சொன்னேன்.. உங்க குழந்ததா சார் அழுகுதுனு சொன்னாரு அவரு’ ராஜகுமாரன்

Devayani Rajakumaran: ‘தேவயானிட்ட குழந்தையே வேணாம்னு சொன்னேன்.. உங்க குழந்ததா சார் அழுகுதுனு சொன்னாரு அவரு’ ராஜகுமாரன்

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 09, 2024 12:51 PM IST

Devayani Rajakumaran : நாங்களே அப்ப சின்னவங்கன்றதால பக்கத்து வீட்டு காரவுங்க கணவன் மனைவி இரண்டு பேரும் வந்துருந்தாங்க. அந்தம்மாவ டெலிவரி ரூம்க்கு எடுத்துட்டு போயிருந்தாங்க. ஏதோ ஒரு சத்தம் கேட்டதும்.. ஏதோ குழந்தை அழுகுதுசார் எங்கயோன்னே.. அதுக்கு அவர் அது உங்க குழந்தைதா சார் அப்படின்னாங்க..

‘தேவயானிட்ட குழந்தையே வேணாம்னு சொன்னேன்.. உங்க குழந்ததா சார் அழுகுதுனு சொன்னாரு அவரு’ ராஜகுமாரன்
‘தேவயானிட்ட குழந்தையே வேணாம்னு சொன்னேன்.. உங்க குழந்ததா சார் அழுகுதுனு சொன்னாரு அவரு’ ராஜகுமாரன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஹீரோயினாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். தேவயானியின் காதல் மற்றும் திருமணம் தென்னிந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இயக்குநர் ராஜகுமாரன் 'விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். இப்படத்தில் தேவயானி தவிர சரத்குமார், விக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.' இதையடுத்து ராஜகுமாரனை தேவயானி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்குமிடையே தோற்றம் உட்பட பெரிய வேறுபாடுகள் இருந்தன. அதனால், நிறம் மற்றும் உயரம் காரணமாக தேவயானியைக் காதலித்த பிறகு, ராஜகுமாரன் பல கிண்டல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று வரை தேவயானி ராஜகுமாரன் தம்பதிகள் வெற்றிகரமான தங்கள் திருமண வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த தம்பத்திக்கு பிரயா, இனியா இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ராஜகுமாரன் அவள் விகடன் யூடியூப் சேனலில் தனது மகள் இனியாவுடன் பேட்டி அளித்திருந்தார். அப்போது ராஜகுமாரன் கூறியதாவது,

எனக்கு குழந்தைகள் உருவாக்கி கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஏனென்றால், எனக்கு இந்த அப்பாவை பிடிக்கவே புடிக்காது, இந்த அம்மா எனக்கு பிடிக்கவே புடிக்காது. ஏன்னா இந்த மோசமான உலகத்தில் என்னை எப்படி கொண்டு வந்தீங்க நா எப்படி கஷ்டப்படுவேன்னு குழந்தைகள் நினைக்குறாங்க.

எப்படி போராடுவேன்னு உங்களுக்கு கொஞ்சம் கூட பீலிங்ஸ் இல்லயா.. சாதாரணமா வில்லேஜ்ல கூட வாழ்றது எவ்வளவு பெரிய போராட்டமா இருக்கு இதுல நாம ஒரு குழந்தைய கொண்டு வந்து அவனையும் போராட வச்சா இந்த ரெண்டு பேரையும் எனக்கு பிடிக்கவே பிடிக்கல நினைக்குறாங்க.நிஜம்.

குழந்தையே வேண்டாம்

அதனால இன்னொரு குழந்தைய கொண்டு வந்து கஷ்டப்படுத்திட கூடாதுன்றதுக்காக நான் தேவயானிட்ட சொன்னேன். நமக்கு எதுக்கு குழந்தைகன்னு தேவயானிகிட்ட சொன்னே. உன்னை மாதிரி ஒரு பொண்ணு என்னமாதிரி ஒரு பையனு வேண்டா.. நீயும் நானுமே போதும் அப்படின்னு தா நா சொன்னேன். அந்தம்மா ஒத்துக்கவே இல்ல. அதுவும் ஒன்னுக்கு இரண்டா.. அதுவும் விகடனுடைய கோலங்கள்லயே இரண்டு புள்ளிகள் வச்சு பெரிய பெரிய கோலம் போட்டு இப்ப அந்த கோலங்கள் மேல உட்காந்து இண்டர்வியூ குடுத்துகிட்டு இருக்கோம்.

ஆனா டெலிவரி டைம்ம எங்களால மறக்க முடியாது. இந்த அம்மா குழந்தை வேணும் குழந்தை வேணும்னு சொல்லி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்ல வேண்டி வேண்டி குழந்தை ரெடியாகிடுச்சு. குழந்தை பிப்ரவரி எண்டுலதா பிறக்குறதா இருந்தது.

ஆனா இந்த குழந்த நடு ராத்தி 11 மணிக்கு வயித்துல பிரச்சனை பண்ணி கரெக்டா 12.05க்கு பிறந்துட்டாங்க. அன்னைக்கு வைகுண்ட ஏகாதசரி. சரியா சொர்க்க வாசல் திறக்குறாங்க. ஆஸ்பத்திரில சிசேரியன் பண்ணி 48 நாள்க்கு முன்னாடியே ஒரு மண்டலம் முன்னாடியே பிறந்துடுச்சு.

உங்க குழந்தைதா சார் அழுகுது

ஆஸ்பத்திரில இருந்தோம். நாங்களே அப்ப சின்னவங்கன்றதால பக்கத்து வீட்டு காரவுங்க கணவன் மனைவி இரண்டு பேரும் வந்துருந்தாங்க. அந்தம்மாவ டெலிவரி ரூம்க்கு எடுத்துட்டு போயிருந்தாங்க. ஏதோ ஒரு சத்தம் கேட்டதும்.. ஏதோ குழந்தை அழுகுதுசார் எங்கயோன்னே.. அதுக்கு அவர் அது உங்க குழந்தைதா சார் அப்படின்னாங்க.. எனக்கு தெரியவே இல்லன்னாங்க என்றார் ராஜ குமாரன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்