Desingh periyasamy: ‘சிம்புவோட திறமையை முழுசா பயன்படுத்தினவங்க கம்மி;தீபிகா கதாநாயகியா’? - தேசிங்கு பெரியசாமி பேட்டி
சிலம்பரசனின் திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம எஸ்.டி.ஆர் 48. இப்படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் . வரலாற்று படமாக உருவாகி வரும் இந்த சரித்திர படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து புதிய கெட்-அப்பில் நடித்து வருகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருகிறது. சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இது இருக்கும் என்று தெரிகிறது. எஸ்.டி.ஆர் 48 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சிம்புவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
படம் குறித்து பேசிய தேசிங்கு பெரியசாமி, “ சிலம்பரசனுடன் நான் இணையும் இந்ததிரைப்படம் ஒரு வரலாறு சம்பந்தமான படம். இந்தப்படம் ஒரு ஆக்சன் எண்டர்டெயினர் ஜானர் வகையை சேர்ந்தது. படத்தில் நிறைய மாஸான தருணங்கள் இருக்கின்றன. இந்தப்படம் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் படத்திற்கு முன்னதான பணிகளுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது.
பணிகள் சென்று கொண்டிருக்கின்றன. சில இயக்குநர்கள் மட்டும்தான் சிலம்பரசனின் திறமையை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார்கள். சிலம்பரசனின் திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில் இந்தப்படம் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும்.
படத்திற்காக அவர் தாய்லாந்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றார். தற்போது லண்டனில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக கமிட் செய்யப்படவிடவில்லை.” என்று பேசினார்.
டாபிக்ஸ்