Ilayaraja: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ilayaraja: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Ilayaraja: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Marimuthu M HT Tamil
Jan 31, 2025 05:32 PM IST

Ilayaraja: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Ilayaraja: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Ilayaraja: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே, இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தினால் காப்புரிமை பிரச்னை வருகிறது. 

2017ஆம் ஆண்டில் தனது உலக சுற்றுப்பயணத்தில் அனுமதியின்றி, தனது இசையில் வந்த பாடல்களைப் பாடியதற்காக, தனது நெடுநாள் நண்பரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீது வழக்குத் தொடர்ந்தபோது, பலரால் கவனிக்கப்பட்டார், இளையராஜா.

அதன்பின், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு; லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடிக்கும் ’’கூலி’’ திரைப்படத்தின் அறிவிப்பு டீஸரில் தனது பாடல் அறிவிப்பு டீஸரில் பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா புகார் கூறினார்.

மேலும், 1983ஆம் ஆண்டு ’’தங்க மகன்’’ திரைப்படத்தில் இருந்து ’’வா வா பக்கம் வா’’ என்ற பாடலை, ரஜினி நடிக்கும் ‘கூலி’ தயாரிப்பாளர்கள் இளையராஜாவின் அனுமதியின்றி ஒரு டீஸர் வீடியோவுக்காக பயன்படுத்தியிருந்தனர் எனக் கூறப்பட்டது.

’என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை!:

இந்நிலையில் அதேபோல் பிரச்னை தற்போது வெடித்து இருக்கிறது. இந்நிலையில் இளையராஜா இசையமைத்த ’என் இனிய பொன் நிலாவே’ பாடலை, பயன்படுத்துவதற்கான காப்புரிமை இளையராஜாவிடமே இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அது குறித்துப் பார்ப்போம்.

அதாவது பாலு மகேந்திரா இயக்கி, இளையராஜா இசையமைத்து, பிரதாப் போத்தன், ஷோபா ஆகியோர் நடித்த படம், மூடு பனி. இப்படத்தில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடல் ரசிகர்கள் பலரால் கொண்டாடப்பட்ட பாடல் ஆகும். இந்நிலையில் இப்பாட்டின் பாடல் வரிகளை இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் எழுதியிருந்தார். இப்போது இந்தப் பாடலில் தான் காப்புரிமை பிரச்னை வெடித்து இருக்கிறது.

இந்தப் பாடலை பா.விஜய், தான் நடிகர் ஜீவாவை வைத்து இயக்கும் ’அகத்தியா’ படத்திற்கு மீள் உருவாக்கம் செய்துதருமாறு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் கேட்டிருக்கிறார். இந்தப் பாடலுக்கான காப்புரிமை தனது தந்தையிடம் இருக்கிறது என நினைத்திருக்கிறார், யுவன் சங்கர் ராஜா. 

இந்த மீள் உருவாக்கப்பாடலை விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். இதன் மூல வெர்ஷனை அவரது தந்தையான யேசுதாஸ் பாடியிருக்கிறார்.

சரிகம நிறுவனம் மீது வழக்குத்தொடர்ந்த வேல்ஸ் ஃபிலிம்ஸ்:

மேலும் இந்தப் படத்தை தயாரிக்கும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தப் பாடலின் உரிமையை தாங்கள் தான் வைத்திருப்பதாக சமூக வலைதளத்தில் கூறியது. இதற்கிடையே ’என் இனிய பொன் நிலாவே’ பாடலை சோசியல் மீடியாவில் பயன்படுத்தியதற்காக சரிகம நிறுவனம் மீது வழக்குத் தாக்கல் செய்தது, வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம்.

இத்தகைய சூழலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் மூடு பனி படத்தில் வரும் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் வரிகளுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு கிடையாது என்றும், அதனால் இளையராஜா வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்துக்கு காப்பிரைட்ஸை கொடுக்க முடியாது என வழக்கை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்னா கூறியிருக்கிறார்.

பாடலை நீக்கிய வேல்ஸ் ஃபிலிம்ஸ்:

மேலும் இப்பாடலின் உரிமை சரிகம நிறுவனத்திடமே இருக்கிறது என்றும், இந்தப் பாடலை ’அகத்தியா’ படத்தில் பயன்படுத்த விரும்பினால், ரூ.30 லட்சம் ரூபாய் உரிமைத்தொகை செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம் என நீதிபதி மினி புஷ்கர்னா கூறினார்.

இந்நிலையில் இப்பாடலை அகத்தியா படத்தில் பயன்படுத்தினால் தானே சிக்கல், அதை நீக்கிவிடுவோம் என முடிவு எடுத்து நீக்கிவிட்டது என தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

இப்படம் விரைவில் ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ஜீவா, ராசி கண்ணா, யோகி பாபு, அர்ஜூன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.