Aishwarya Rai: மகள் ஆராத்யா உடல்நிலை குறித்த அவதூறு தகவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Aishwarya Rai: ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல ஊடகங்களுக்கு பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய திரையுலகின் ஸ்டார் கிட்டாக இருப்பவர் ஆர்த்யா பச்சன். முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் - பாலிவுட் ஹீரோவான அபிஷேன் பச்சன் தம்பதியின் ஒரே மகளாக இருந்து வரும் ஆராத்யாவுக்கு தற்போது 13 வயதாகிறது.
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆராத்யா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்கமாறு பிரபல ஊடகங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடல்நிலை பற்றி தவறான தகவல்
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எப்போதும் மீடியா வெளிச்சம் என்பது பின் தொடர்ந்து கொண்டே இருந்து வருகிறது. அதன்படி ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா பிறந்ததில் இருந்து அது தொடர்ந்து வந்த நிலையில், ஐஸ்வர்யா ராய், அவரது கணவரும் நடிகுருமான அபிஷேக் பச்சன் கடந்த ஆராத்யா பற்றி பல்வேறு தகவல்கள் ஏராளமான ஊடகங்களில் வெளியாகி வந்துள்ளன.
அதன் தொடர்ச்சியில் ஆராத்யா உடல் நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பியதாக சில ஊடகங்களை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன் அவதூறு பரப்பும் தகவல்கள், வீடியோக்களை நீக்கவும் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
ஆராத்யா பச்சன் தரப்பில் தொடரப்பட்ட இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அவதூறு பரப்பில் ஊடகங்களை குறிப்பிட்டு பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், வழக்கின் விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
ஏற்கனேவே வீடியோக்கள் நீக்கம்
கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி சி ஹரி சங்கர், இதுபோன்ற வீடியோக்கள் பரப்புவதை கடுமையாகக் கண்டித்தார், ஒவ்வொரு குழந்தையும் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள். ஒரு மைனரின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது சட்டத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருத்து தெரிவித்தார்.
கடந்த 2023 ஏப்ரலில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆராத்யா பச்சன் உடல்நிலை குறித்த போலி விடியோக்கள் நீக்கப்பட்டது. அதேபோல் இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றுவதற்குப் பொறுப்பான நிறுவனங்களின் விவரங்களை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களையும் கூகிள் நீக்கி செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. யூடியூப் தளத்தில் இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைக் கையாள்வது குறித்த அதன் கொள்கையை விரிவாகக் கூறுமாறு கூகுளுக்கு உத்தரவும் பிறபிக்கப்பட்டது.
அத்துடன் இதுபோன்ற வீடியோக்களை பயனாளர்களின் அணுகலை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கும் உத்தரவிடப்பட்டது.
ஆராத்யா பச்சன்
கடந்த 2007இல் பாலிவுட் ஸ்டார்களான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2011 நவம்பர் 16இல், ஆராத்யா பச்சனை ஐஸ்வர்யா ராய் பெற்றெடுத்தார். அதன் பிறகு தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஆராத்யாவையும் அழைத்து செல்லும் வழக்கத்தை தொடர்ந்தார் ஐஸ்வர்யா ராய். குழந்தையாக இருந்தபோது எப்போது ஆராத்யாவை தனது இடுப்பில் சுமந்து கொண்டவாறே இருந்துள்ளார்.
இருப்பினும் ஊடகத்தினர் தனது மகள் ஆராத்யாவை எந்த சூழ்நிலையிலும் நெருக்க விடாமல் பாதுகாப்புடனே வலம் வந்துள்ளார். இருப்பினும் ஆராத்யா உடல்நிலை குறித்து அவதூறு பரப்பும் வீடியோ விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்