Tamil News  /  Entertainment  /  Definitely Cancel The Ttf Vasan Vehicle License Says Bjp Narayanan Thirupathy

TTF Vasan Accident: விழுந்து வாரிய டிடிஎஃப் வாசன்; “பாவம் பாத்துறாதீங்க; லைசன்ஸ கேன்சல் பண்ணுங்க”- பொங்கிய பாஜக பிரபலம்!

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி என்ற இடத்தில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கில் செல்லும்போது வீலிங் ஸ்டண்ட் செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக்கானது விபத்துக்குள்ளானது.

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து அவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டது. இதற்கிடையே டிடிஎஃப் வாசன் ஸ்டண்ட் செய்து, விபத்துக்கான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்து தொடர்பாக டிடிஎஃப் மீது மனித உயருக்கு ஆபத்துகளை விளைவிப்பது, பிறரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிடிஎஃப் வாசன், சென்னை அம்பத்தூரில் உள்ள தனது நண்பர் ஆஸிஸ் என்பவரின் வீட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் டிடிஎஃப் வாசன் அங்கிருந்து தப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், டிடிஎஃப் வாசன் தங்களது வீட்டுக்கு வந்ததாக வெளியான தகவல் தவறானது எனவும் அவர் எங்கிருக்கிறான் என்பது தெரியாது என்றும் போலீசாரிடம் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. போலீசார் அவரை தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த விபத்தில் டிடிஎஃப் வாசன் கைகள், உடலின் பல்வேறு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பைக் விபத்தில் இவர் சிக்கியது இதுமுதல் முறையல்ல. ஏற்கனவே இவர் மீது வாகனத்தில் அதிகவேகமாக சென்றது, ஆபத்தை விளைவிக்கும் விதமாக செல்வது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் பாஜக மாநில துலைவரான திருப்பதி நாராயணன் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ டிடிஎஃப் காயமடைந்துள்ளதால் ‘ஐயோ பாவம்’ என்று நின்று விடாமல், பொதுமக்க்ளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டியதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை அவரது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று பேசினார்.

டாபிக்ஸ்