தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Deepika Padukones Return To Bollywood Balkowa Is All About It

HBD Deepika Padukone: 'இறங்கி அடிக்கும் பாலிவுட் பால்கோவா' திரும்பும் திசை எல்லாம் தீபிகா படுகோன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 05, 2024 07:43 AM IST

தீபிகா தன் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றார். தேசிய விருது போன்ற பல விருதுகளை பெற்ற தீபிகா சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்றார். குளோபல் அச்சீவர்ஸ் அவார்ட் என அழைக்கப்படும் அந்த விருதினை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை தீபிகா படுகோனையே சேரும்

திரும்பும் திசை எல்லாம் தீபிகா படுகோன்!
திரும்பும் திசை எல்லாம் தீபிகா படுகோன்!

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

தீபிகா படுகோனே டென்மார்க் தலைநகரில் பிரகாஷ் படுகோனே-உஜ்ஜலா தம்பதியினருக்கு மகளாக 1986 ஜனவரி 5 அன்று பிறந்தார். குழந்தை பருவத்திலேயே அவரது பெற்றோர் பெங்களூருக்கு குடி பெயர்ந்தனர். பெங்களூரில் உள்ள சோபியா பள்ளியில் ஆரம்ப கல்வியும் கார்மெல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

இவரது தந்தை சிறந்த பூப்பந்தாட்ட வீரர் இதனால் ஆரம்ப நாட்களில் தந்தையை போலவே பூப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கியிருந்தார்.

மாடலிங்

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டியதன் விளைவாக விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த காலத்தில் கிங் பிஷர் நிறுவன காலண்டர் புகழ் பெற்றது. அதில் நீச்சல் உடையில் இவருடைய படங்களே படு கிளாமராக கிறங்க வைத்தார். பல பிரபல நிறுவனங்களில் வியாபார தூதுவரானார்.

திரைப்பட துறை

கடந்த 2006 ல் ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில் உபேந்திராவுடன் ஜோடியாக நடித்தார். 2007 ல் பாலிவுட்டில் ஓம்சாந்தி ஓம் படத்தின் மூலமாக கால் பதித்தார். நல்ல பெயரோடு விருதுகள் குவிந்தன. அதன் தொடர்ச்சியாக பாலிவுட்டின் முன்னனி ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்தார். பிற மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது உடல் வாகும் அழகும் நடிக்கும் திறனும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றது. பல மொழிகளில் வெளியாகும் பேன் இந்தியா மூவிகளில் இவர் இருந்தால் கோடிகளில் வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெறும் என்ற அளவுக்கு மாறி விட்டது.

குறிப்பாக 2013ல் இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களில் 100 கோடியை வசூலை சாதாரணமாக தாண்டியது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டில் லேசான சரிவை சந்தித்தார் தீபிகா. இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளும் இதற்கு ஒரு காரணம். காரணம் ஏதும் இல்லாமல் நான் வெறுமையாகவும் இருளில் இருப்பது போலவும் உணர்ந்தேன். அதிலிருந்து மீள எனது குடும்பம் உதவியது. நான் மன நல மருத்துவரை அணுகி முழுமையாக குணம் அடைந்தேன். மன உளைச்சல் என்பது ஒரு நோய். சிகிச்சை பெற்றால் குணமாகி விடும். அவர்களை பைத்தியம் என்று முத்திரை குத்த வேண்டாம் என்று தனது நேர்காணலில் வெளிப்படையாக தெரிவித்தார். அவரது அந்த துணிச்சலை பாலிவுட் உலகம் கொண்டாடியது.

தீபிகா தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் அறிமுகமானார். தமிழில் வெளியான ஜவான் படத்திலும் இவர் நடித்துள்ளார்.  

திருமணம்

ஆரம்பத்தில் பலருடன் இணைத்து தீபிகா குறித்து கிசுகிசுக்கள் வெளியானது. அப்படியான தருணங்களில் இது என் தனிப்பட்ட விஷயம் என்ற ரீதியிலேயே தீபிகாவின் எதிர்வினை இருந்தது. பின்னர் 2018ல் ரன்பீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள்

தீபிகா தன் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றார். அடுத்தடுத்து தேசிய விருது போன்ற பல விருதுகளை பெற்ற தீபிகா சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்றார். குளோபல் அச்சீவர்ஸ் அவார்ட் என அழைக்கப்படும் அந்த விருதினை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை தீபிகா படுகோனையே சேரும்

இப்போது இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவாகி இருக்கிறார். தீபிகாவின் கால்ஷீட்காக பாலிவுட் உலகமே காத்து கிடக்கிறது . முன்னனி ஹீரோக்கள், இயக்குனர்கள் இவருடைய தேதிக்காக காத்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.