தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Deepika Padukone Ranveer Singh Announce They Are Having A Baby In September

Deepika - Ranveer:'எங்கள் முதல் குழந்தையை செப்டம்பரில் எதிர்பார்க்கிறோம்’:கர்ப்பத்தை அறிவித்த தீபிகா -ரன்வீர் தம்பதி!

Marimuthu M HT Tamil
Feb 29, 2024 10:49 AM IST

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதியினர் வரும் செப்டம்பர் மாதம் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.

Deepika - Ranveer:'எங்கள் முதல் குழந்தையை செப்டம்பரில் எதிர்பார்க்கிறோம்’ - அறிவித்த தீபிகா -ரன்வீர் தம்பதி!
Deepika - Ranveer:'எங்கள் முதல் குழந்தையை செப்டம்பரில் எதிர்பார்க்கிறோம்’ - அறிவித்த தீபிகா -ரன்வீர் தம்பதி!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் தீபிகா மற்றும் ரன்வீர் ஆகியோர் இன்ஸ்டாகிராமில், தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தனர். மேலும்,அவர்கள் தங்கள் குழந்தையை வரும் செப்டம்பர் 2024-ல் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்தில், தீபிகா படுகோனே இரண்டாவது முறையாக கருத்தரித்து  இருப்பதாகவும், மூன்று மாதக்கருவுடன் இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ’தி வீக்’ ஊடகத்திடம் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகவலை தீபிகா படுகோனே - ரன்வீர் தம்பதியினர் தற்போது உறுதி செய்துள்ளனர்.

தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பது அறிவிப்பு:-

லண்டனில் நடந்த பாஃப்டா சிவப்புக் கம்பள வரவேற்பில், பங்கேற்ற தீபிகா படுகோனே தனது வயிற்றை மறைக்க முயன்றதாகக் கூறப்படுவதாக ஊகங்கள் தொடங்கின. அந்த விருது வழங்கும் விழாவில், சபியாசாச்சி முகர்ஜி டிசைன் செய்து தந்த பிரமிக்க வைக்கும் பளபளப்பான சேலை மற்றும் நகைகளை அணிந்திருந்தார், தீபிகா படுகோனே.

பெற்றோர் குறித்து தீபிகா

ஜனவரி 2024-ல் வோக் சிங்கப்பூர் ஊடகத்துக்கு தீபிகா அளித்த பேட்டியில், குழந்தை பெறுவது குறித்த தனது விருப்பத்தைப் பதிவு செய்திருந்தார். 

அதில் தீபிகா படுகோனே, "ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அவர் தனது குழந்தை வளர்ப்பு குறித்த ஆசையையும் பிரதிபலித்தார். 

இந்தத் தொழிலில், புகழ் மற்றும் பணத்தைப் பெறுவது எளிது. ஆனால், என் வீட்டில் நான் பிரபலம் கிடையாது. முதலில் நான் ஒரு மகள், ஒரு சகோதரி. அவ்வாறாகவே இருக்க விரும்புகிறேன். அது மாறுவதை நான் விரும்பவில்லை. என் குடும்பம் என்னை அடித்தளமாக வைத்து இயங்குகிறது. ரன்வீரும் நானும் எங்கள் குழந்தைகளிடமும் அதே குணங்களோடு வளர்ப்போம் என்று நம்புகிறோம்’’என்றார்.

இந்நிலையில் தான் தீபிகா படுகோனேவும் மற்றும் ரன்வீர் கபூரும் தாங்கள் தங்கள் குழந்தையை வரும் செப்டம்பர் 2024-ல் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்