Deepika Padukone: மனநோயாளிகளை சந்தித்து நேரத்தை செலவிட்ட தீபிகா படுகோனே
தமிழகத்தில் அமைந்துள்ள Live Love Laugh என்ற தனது மனநல ஆரோக்கிய பவுன்டேஷனுக்கு வருகை புரிந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அங்குள்ள மனநல நோயாளிகளை சந்தித்து அவர்களிடம் நேரத்தை செலவிட்டார்.
உலக மனநல ஆரோக்கிய நாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் பகுதியில் தனது Live Love Laugh என்ற மனநல ஆரோக்கிய பவுன்டேஷனுக்கு விசிட் அடித்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அங்குள்ள மனநோயளிகளை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட்ட அவர், அவர்களை கவனித்து கொள்ளும் பராமரிப்பாளர்கள் சந்தித்து உரையாடினார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட தீபிகா, தனது பவுன்டேஷனையும் டேக் செய்துள்ளார். இந்த பயணம் பற்றி குறிப்படுள்ள அவர், " மனநலம் பாதிப்புக்குள்ளானவர்கள், அவர்களின் பராமரிப்பாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பணிகளை எங்களது பவுன்டேஷன் மூலம் இடைவிடாது செய்து வருகிறோம். தமிழகத்திலுள்ல கிராமப்புறங்களின் இந்த பணிகளை விரிவுபடுத்தும் முக்கிய பணியை மேற்கொண்டு அனைவரும் எளிதில் அனுகும் விதமாக செயல்படுகிறோம்." என்று கூறியுள்ளார்.
பராமரிப்பாளர்களுடன் நிகழ்த்திய உரையாடல், தனது சேலையால் பெண் ஒருவரின் கண்ணீரை துடைத்தல் என பல புகைப்படங்களை தீபிகா பகிர்ந்துள்ளார். இதற்காக இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட தீபிகா, இதன் விடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் Live Love Laugh என்ற பவுன்டேஷனை தொடங்கிய தீபிகா, தானும் மனஉளைச்சலில் பாதிக்கப்பட்டு அதற்கான உரிய மருத்துவ உதவியை நாடிய பின்னர் குணமடைந்ததாக அப்போது தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும், "எனது தனிப்பட்ட பயணத்திலும் எனது மனநலத்தை பேணிக்காக்கும் விதமாக பராமரிப்பாளர் பங்களிப்பு இருந்தது. அதனை எனது தாயார் உஜ்வால் படுகோனே சிறப்பாக பார்த்துக்கொண்டார். அவருடன் எனது தங்கை அனிஷா படுகோனேவும் என்னுடன் சில ஆண்டுகள் கைகோர்த்து இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்" என்றார்.
டாபிக்ஸ்