போர் வீராங்கனையான தீபிகா படுகோன்.. சம்பவம் செய்யும் அட்லி.. வெளியான கூஸ்பம்ப்ஸ் வீடியோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  போர் வீராங்கனையான தீபிகா படுகோன்.. சம்பவம் செய்யும் அட்லி.. வெளியான கூஸ்பம்ப்ஸ் வீடியோ!

போர் வீராங்கனையான தீபிகா படுகோன்.. சம்பவம் செய்யும் அட்லி.. வெளியான கூஸ்பம்ப்ஸ் வீடியோ!

Malavica Natarajan HT Tamil
Published Jun 07, 2025 01:55 PM IST

மாபெரும் பொருட் செலவில் அட்லீ இயக்கும் பான்-இந்திய திரைப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Deepika Padukone prepping for her film with Atlee and Allu Arjun.
Deepika Padukone prepping for her film with Atlee and Allu Arjun.

சன் பிக்சர்ஸின் அறிவிப்பு

தீபிகா படுகோன் மேலும் ஒரு பான்-இந்திய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நேற்று (ஜூன் 6) அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் AA22xA6 என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் தீபிகா கதாநாயகியாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை வீடியோ ஒன்றுடன் அறிவித்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

அட்லியுடன் ஆலோசனை

அந்த அறிவிப்பு வீடியோவில், அட்லீயுடன் தீபிகா உரையாடும் காட்சிகள் உள்ளன. இருவரும் மிகத் தீவிரமாக கைகளை அசைத்து பேசி வருகின்றனர். பின் சில ஸ்கிரிப்டில் உள்ள சில ஓவியங்கள் வெளிவருவது போல கிராபிக்ஸ் காட்சிகள் காட்டப்பட்டன. பின், இருவரும் சிரித்து கை குழுக்கிய பின் ஒரு ஸ்டூடியோவிற்குள் செல்கின்றனர். பின், சில ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றது.

மோஷன் சென்சார்- சிஜி காட்சிகள்

அந்த வீடியோவில், அட்லீ வழிகாட்டலின்படி, தீபிகா கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அந்த அசைவுகளை மீண்டும் உருவாக்குவதைக் காண்கிறோம். மேலும், அவர் கையில் ஆயுதத்துடன் ஒரு CGI குதிரையின் மீது அமர்ந்து விளம்பரப் படத்திலும் நடிக்கிறார். அவரது உடலில் மோஷன் கேப்சர் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிளாக்பஸ்டர் கூட்டணி

மேலும், “ராணி தனது இலக்கை கைப்பற்ற அணிவகுத்து வருகிறார்! தீபிகா படுகோன் அவர்களை வரவேற்கிறோம். அவர் AA22xA6-ன் முகம். AA22xA6 என்பது சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட படைப்பு.” என்று குறிப்பிடப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் “தீபிகா படுகோன் ஆக்ஷன் கூஸ்பம்ப்ஸ்,” என்று ஒரு ரசிகர் எழுதினார். மற்றொருவர், “அவர் இங்கே மிகவும் கெத்தாக இருக்கிறார்” என்று கூறினார். மூன்று பெரிய நட்சத்திரங்களின் கூட்டணியும் பிளாக்பஸ்டர் ஆகும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

8 மணி நேர வேலை பிரச்சனை

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய மற்றொரு பான்-இந்திய திரைப்படமான 'ஸ்பிரிட்'டிலிருந்து தீபிகா சமீபத்தில் விலகியதை சிலர் கிண்டல் செய்தனர். “அவருக்கு வங்கா தேவையில்லை,” என்று ஒரு ரசிகர் கூறினார். தீபிகா தொழில்முறை ரீதியிலான கோரிக்கைகளை வைத்ததாக வங்கா உட்பட படத்தின் குழுவினர் கூறியதால், படத்தின் குழுவினருக்கும் தீபிகாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஆனால் தீபிகா ஒரு புதிய தாயாக இருப்பதால் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று கேட்டதாக மற்ற அறிக்கைகள் கூறுகின்றன. தீபிகா இதற்கு முன்பு பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த நாக் அஸ்வின் இயக்கிய 'கல்கி 2898 AD' என்ற பான்-இந்திய பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.