Deepak: இதயங்களை வென்றவர் தீபக்! பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் தீபக்கிற்கு கிடைத்த வரவேற்பு!
Deepak: பிக்பாஸ் சீசன் 8 இல் இருந்து தீபக் நேற்று வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழ் டிவி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்களிடத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றது. தற்போது 8 ஆவது சீசன் வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த 7 சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். மேலும் புது விதமான விதிகளையும் இந்த நிகழ்ச்சிகளில் கொண்டு வந்தனர். கடந்த சீசன்களில் யாரேனும் ஒரு நபர் மக்களின் மிகவும் பேவரைட் போட்டியாளர் என்று ஒருவர் இருந்து வந்தார். ஆனால் இந்த சீசனில் அப்படி குறிப்பிட்ட போட்டியாயளர் என ஒருவர் இல்லாமல் இருந்தார். ஆனால் இந்த சீசனிலும் சில போட்டியாளர்களை மக்களுக்கும் பிடித்தது.
பிக்பாஸ் சீசன் 8
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 இன்று வரை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.மேலும் இன்னும் ஒரே வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைய போகிறது டைட்டில் வின்னராக யார் வருவார் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர் தீபக் வெளியேற்றப்பட்டார். தீபக் போட்டியினால் ஆரம்ப நாள் முதலே மிகவும் சிறப்பாக பங்கேற்று வரும் போட்டியாளராக கருதப்பட்டார். மேலும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று தீபக் வெளியேற்றப்பட்டது பல ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் சகப் போட்டியாளரான முத்துக்குமரன் தீபக்கின் எலிமினேஷன் செய்யப்பட்டதற்கு மிகவும் வருத்தத்துடன் அழுது வழி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் தீபக்கிற்கு அவரது குடும்பத்தினர் கோலாகலமாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றனர். டைட்டில் வின்னர் ஆகும் தகுதியுடைய ஒரு நபர் தீபக் எனவும் அவரை எலிமினேட் செய்தது சரியல்ல எனவும் பல ரசிகர்கள் எக்ஸ்ட்ரா பதிவில் பதிவிட்டு வருகின்றனர்.
டைட்டில் வின்னர்
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே தீபக் சிறப்பாக விளையாடி வந்தார். மேலும் போட்டியின் டைட்டில் வின்னராக ஆகும் தகுதி தீபக்கிற்கு இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் தீபக்கின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போதும், தீபக் நான் இந்த டைட்டில் வின்னருக்கு தகுதியான ஆள் தான். ஆனால் என்னை விட தகுதியான நபர்கள் பலர் இங்கு உள்ளனர் என தீபக் கூறியிருப்பார். அந்த அளவிற்கு தன்மையான மனிதராக தீபக் இருந்ததையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் தீபக் வீட்டிற்கு வந்த போது உடன் அவரது நண்பர் சஞ்சீவ்வும் உடன் இருந்தார். மேளம் முழங்க, பெரிய மாலை மற்றும் ஆரத்தியுடன் தீபக்கை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். மேலும் ரசிகர் ஒருவர் தீபக் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் எனவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். தீபக் வெளியேறிய நிலையில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக வருவார் என எதிறப்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் பிக்பாஸ் கடைசி எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

டாபிக்ஸ்