Deepa Venkat: ‘பார்க்குற பார்வையிலே.. ஒருத்தன் எதுக்கு நம்மகிட்ட.. நாம இடம் கொடுக்காம எப்படி ’- தீபா வெங்கட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Deepa Venkat: ‘பார்க்குற பார்வையிலே.. ஒருத்தன் எதுக்கு நம்மகிட்ட.. நாம இடம் கொடுக்காம எப்படி ’- தீபா வெங்கட்

Deepa Venkat: ‘பார்க்குற பார்வையிலே.. ஒருத்தன் எதுக்கு நம்மகிட்ட.. நாம இடம் கொடுக்காம எப்படி ’- தீபா வெங்கட்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 11, 2025 08:50 PM IST

நான் பொதுவாகவே யாரையும் அவ்வளவு சீக்கிரம் என்னுடைய நண்பராக ஏற்றுக் கொள்ள மாட்டேன். எல்லோரிடம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை எப்போதும் நான் கடைப்பிடிப்பேன். - தீபா வெங்கட்

Deepa Venkat: ‘பார்க்குற பார்வையிலே.. ஒருத்தன் எதுக்கு நம்மகிட்ட.. நாம இடம் கொடுக்காம எப்படி ’- தீபா வெங்கட்
Deepa Venkat: ‘பார்க்குற பார்வையிலே.. ஒருத்தன் எதுக்கு நம்மகிட்ட.. நாம இடம் கொடுக்காம எப்படி ’- தீபா வெங்கட்

சீக்கிரமாக குணமாகுங்கள்

இது குறித்து jfw யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், ‘அது போன்று கூறும் நபர்களை நான் பார்த்தால், தயவுசெய்து நீங்கள் சீக்கிரமாக குணமாகுங்கள் என்று கூறுவேன். அவர்கள் என்ன விளையாடுகிறார்களா..? சவால் என்பது எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. ஒரு இடத்தில் அளவுக்கு அதிகமான வருமானமும், புகழும் கிடைக்கும் பொழுது, அந்த இடத்திற்கு வருவதற்கு பலரும் முயற்சி செய்வார்கள். அது இயல்பு தான்.

இது டெலிவிஷன் துறை மட்டுமல்ல; இதர துறைகளிலும் இந்த போட்டியானது இருக்கிறது. இது பெண்களுக்கும் இருக்கிறது; ஆண்களுக்கும் இருக்கிறது; என்னுடைய கணவர் ஐடி துறையில் வேலை பார்க்கிறார்; அவர் தினம் தினம் சவால்களை சந்திக்கிறார்; அவருடைய வேலையை பாதுகாத்துக் கொள்வதற்கு கடுமையாக முயற்சி செய்கிறார். காரணம், எப்பொழுது அவர்கள் வேலை விட்டு தூக்குவார்கள் என்று தெரியாது; அதனால் இந்த இடத்தில் ஆண் பெண் என்ற பாரபட்சம் கிடையாது.

நாம் கொடுக்கும் இடம்தான்

நாம் எப்படி மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் அவர்கள் நம்மிடம் நடந்து கொள்வார்கள். நான் பொதுவாகவே யாரையும் அவ்வளவு சீக்கிரம் என்னுடைய நண்பராக ஏற்றுக் கொள்ள மாட்டேன். எல்லோரிடம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை எப்போதும் நான் கடைப்பிடிப்பேன்.

ஒருவர் நமக்கு முன்வந்து அட்வைஸ் கொடுக்கிறார். என்றால், அந்த இடத்தை நாம் முதலில் கொடுத்து இருக்கிறோம். அதனால்தான், அவர் அந்த இடத்திற்குள் வந்து அவர் வருகிறார். ஒரு பெண்ணுக்கு தன் மீது ஒரு தவறான பார்வை விழுகிறது என்றாலே அவளுக்கு தெரிந்து விடும். அவள் அந்தளவுக்கு கூர்மையானவள்.

ஒரு பெண்ணுக்கு ஒருவர் தன்னை எந்த நோக்கத்தில் பார்க்கிறார்; எந்த நோக்கத்தில் அவர் பேசுகிறார் என்பது தெளிவாக தெரிந்து விடும். விவரம் தெரிந்த வயதில் நமக்கு அது புரியாமல் இருக்கலாம். இன்று 14, 15 வயது குழந்தைகளே தெளிவாக இருக்கிறார்கள். நீங்கள் ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு, அந்த வட்டத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும் பொழுது, உங்களை யாரும் வந்து சீண்ட போவதில்லை; அந்த இடத்திற்குள் நீ மற்றவர்களை அனுமதிக்காத வரை, அவர்கள் உள்ளே வந்து பேசுவதற்கான வாய்ப்பு இல்லை.’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.