Deepa Venkat: ‘அந்த விஷயத்துல அம்மணி கறார்.. நயன்தாரா ஒன்னு வேணும்னா முடிவு பண்ணிட்டா அவ்வளவுதான்’ - தீபா வெங்கட்
நயன்தாரா தொழிலில் அவ்வளவு கறாராக இருப்பார். அவருக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றால், அது கிடைக்கும் வரை விடவே மாட்டார். நேர்த்தியாக இருப்பது அவரது இயல்பு. - தீபா வெங்கட்

Deepa Venkat: ‘அந்த விஷயத்துல அம்மணி கறார்.. நயன்தாரா ஒன்னு வேணும்னா முடிவு பண்ணிட்டா அவ்வளவுதான்’ - தீபா வெங்கட்
நயன்தாராவிற்கு பல்வேறு திரைப்படங்களில் பின்னணி குரலாக இருந்த தீபா வெங்கட், அவரைப்பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இது குறித்து jfw யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், ‘நயன்தாரா தொழிலில் அவ்வளவு கறாராக இருப்பார். அவருக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றால், அது கிடைக்கும் வரை விடவே மாட்டார். நேர்த்தியாக இருப்பது அவரது இயல்பு.
டப்பிங் மாடுலேஷன் வரை
அதேபோல, அவர் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி வெளியே தெரிய வேண்டும் என்பதில் மிக மிக கவனமாக இருப்பார். அது அவருடைய ஆடையாக இருக்கலாம், அல்லது அவர் வெளிப்படுத்தக்கூடிய எக்ஸ்பிரஷன்களாக இருக்கலாம் அல்லது அவர் பேசும் டப்பிங் மாடுலேஷனாக கூட இருக்கலாம்.