புதிய பிரச்சனையில் அன்பு ஆனந்தி.. மகேஷிடமிருந்து தப்புவார்களா? சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புதிய பிரச்சனையில் அன்பு ஆனந்தி.. மகேஷிடமிருந்து தப்புவார்களா? சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

புதிய பிரச்சனையில் அன்பு ஆனந்தி.. மகேஷிடமிருந்து தப்புவார்களா? சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 09, 2024 07:38 AM IST

அன்பு, ஆனந்தி மீது மகேஷ் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்க மகேஷ் அம்மாவும் மித்ராவும் பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

புதிய பிரச்சனையில் அன்பு ஆனந்தி.. மகேஷிடமிருந்து தப்புவார்களா? சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
புதிய பிரச்சனையில் அன்பு ஆனந்தி.. மகேஷிடமிருந்து தப்புவார்களா? சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

இந்நிலையில், அன்பு, ஆனந்தியை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்ததை பார்த்த மித்ரா அதுகுறித்து மகேஷின் அம்மாவிற்கு தகவல் கொடுக்கிறார். அப்போது, அன்புவிற்கும் ஆனந்திக்கும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. இதுபற்றி நாம் மகேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என இருவரும் திட்டம் தீட்டுகின்றனர்.

காத்திருக்கும் மித்ரா

அதன்படியே, மித்ரா கார்மெண்ட்சில் வேலை செய்யும் அன்புவும் ஆனந்தியும் எப்போது தனியாக பேசுவார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார். அத்துடன் சமயம் பார்த்து மகேஷிடம் இந்தத் தகவலைக் கூறவும் தவித்து வருகிறார்.

சமாதானம் பேசும் மகேஷ்

முன்னதாக, அன்பு வீட்டை விட்டு வெளியேறிய விஷயம் மகேஷ் காதுக்கு சென்றதால், அன்பு மற்றும் ஆனந்தியின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என நினைத்து வருந்தி அன்பு அம்மாவிடம் சமாதானம் பேசப் போகிறார். அப்போது, அன்பு மேல் கோவப்பட்ட அவரது அம்மா, மகேஷிடம் சில நிபந்தனைகளை விதிக்கிறார். அதற்கு அவரும் கட்டுப்படுகிறார்.

அன்பு போடும் நிபந்தனை

அதே வேளையில், அன்புவும் மகேஷிடம் அவரது காதலியை அவருடன் சேர்த்து வைப்பதாக நம்பிக்கை கொடுக்கிறார். இதை ஆனந்தி தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, மகேஷ் சார் தான் உங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறாரே அப்புறம் என்ன யோசிக்குறீங்க. வீட்டுக்கு போங்கன்னு சொல்கிறார்.

அன்புவின் தவிப்பு

ஆனந்தி சொன்னதைக் கேட்ட அன்புவிற்கு பதட்டம் ஆகிறது. காரணம் மகேஷ் ஆனந்தியை காதலிக்க தான் உதவியாக இருப்பேன் என அவர் கொடுத்த வாக்கு அன்புவை பதற வைக்கிறது. ஆனால், மகேஷ் நடப்பது என்ன என்றே தெரியாமல் அன்புவிற்கு வாக்கு கொடுக்கிறார்.

புலம்பும் மித்ரா

நேற்றைய எபிசோடில், ஆனந்தி அன்ப் வீட்டில் இருப்பதை அவசரப்பட்டு அன்பு அம்மாவிற்கும் ஆனந்தி அப்பாவிற்கும் சொல்லி விட்டோமோ என மித்ராவும் மகேஷ் அம்மாவும் புலம்புகின்றனர். அன்பு வீட்டில் பிரச்சனை ஆனாலும், ஆனந்தியின் அப்பா அழகப்பன் என் மகள் மாதிரி யாரும் இல்ல என சொல்லிட்டு போயிட்டாரு. அந்த ஹாஸ்டர் வார்டனும் ஆனந்திய அப்படியே சந்தோஷமா ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க.

அவங்க ரெண்டு பேரும் ஒன்னா ஓரே ரூம்ல இத்தனை நாள் இருந்ததுனால அவங்களுக்கு நெருக்கம் அதிகமா இருக்கு. ஆனா காதல் இன்னும் வரல. அதுனால இனிமே அவங்கள பிரிக்குறத விட்டுட்டு ஒன்னு சேக்குறதுக்கான வழிய பாக்கனும்னு திட்டம் போடுகின்றனர்.

மகேஷ் அம்மாவின் திட்டம்

அதுமட்டுமல்லாமல், அன்பு ஆனந்தியை இனி கார்மெண்ட்ஸிலும் சந்தித்து பேசுவான். தினமும் ஹாஸ்டலுக்கும் வருவான். கார்மெண்ட்ஸில் இருவரும் பேசும் போது மகேஷை எப்படியாவது பார்க்க வைக்க வேண்டும், ஹாஸ்டலில் பேசும் போது போட்டோ எடுக்க வேண்டும். அதை நாம் நேரம் வரும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என அன்பு அம்மா மித்ராவிற்கு அட்வைஸ் தருகிறாள்.

இதனால், இவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்ததாக பெரிய சதித்திட்டம் தீட்ட காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.