கயலுக்கு எதிரான அம்மாவின் சூழ்ச்சியை அறிந்த எழில்.. ஆத்திரத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன? கயல் சீரியல் அப்டேட்
கயலையும் தன்னையும் பிரிக்க இத்தனை நாளாக அம்மா சிவசங்கரி போட்ட திட்டத்தை அறியும் எழில் அம்மா மீது மிக கோவமாக இருக்கிறார்.

கயலுக்கு எதிரான அம்மாவின் சூழ்ச்சியை அறிந்த எழில்.. ஆத்திரத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன? கயல் சீரியல் அப்டேட்
கல்யாணம் முடிந்த கையோடு கயலின் சொந்த ஊருக்கு சென்று, அங்குள்ள கோயிலில் பொங்கல் வைக்க கயல் குடும்பத்துடன் எழிலும் செல்கிறார்.
அங்கு கயலின் அப்பா பெயரை சொல்லி நடக்கும் பல பிரச்சனைகளை சமாளித்து வந்த நிலையில்,சரவண வேலுவுடன் ஊர் சுற்றி பார்க்கச் சென்ற கயலுக்கும் எழிலுக்கும் ஆபத்து வருகிறது.
கத்திக்குத்துடன் சிகிச்சை
சரவண வேலு, திட்டம்போட்டு, கயலிடமிருந்து எழிலைப் பிரிக்க அடியாட்களை வைத்து எழிலை கத்தியால் குத்தினான். இதில் படுகாயமடைந்த எழில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.