சுக்குநூறாய் உடைந்து போன ஆனந்தி.. ஆறுதல் தரும் அப்பா.. ரகசியமாக சந்தித்த அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சுக்குநூறாய் உடைந்து போன ஆனந்தி.. ஆறுதல் தரும் அப்பா.. ரகசியமாக சந்தித்த அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

சுக்குநூறாய் உடைந்து போன ஆனந்தி.. ஆறுதல் தரும் அப்பா.. ரகசியமாக சந்தித்த அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

Malavica Natarajan HT Tamil
Dec 05, 2024 07:20 AM IST

இன்றைய சிங்கப் பெண்ணே சீரியலில் தன்னை சுற்றி நடந்த விஷயங்களால் மனமுடைந்து இருக்கும் ஆனந்தியை அவரது அப்பா சமாதானம் செய்கிறார்.

சுக்குநூறாய் உடைந்து போன ஆனந்தி.. ஆறுதல் தரும் அப்பா.. ரகசியமாக சந்தித்த அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
சுக்குநூறாய் உடைந்து போன ஆனந்தி.. ஆறுதல் தரும் அப்பா.. ரகசியமாக சந்தித்த அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

மோசமாக நடந்து கொண்ட அன்பு அம்மா

ஆனந்தி, தன் வீட்டில் தங்கி இருந்ததை அறிந்த அன்புவின் அம்மா, அவரை தரதரவென இழுத்து வந்து ரோட்டில் தள்ளுகிறார். இதில், நிலைகுலைந்து கீழே விழுந்த ஆனந்தியை அன்பு தூக்குகிறார்.

அப்போது, ஆனந்தியை தொடக்கூடாது என அன்புவின் அம்மா திட்டுவதுடன், ஆனந்தியின் வளர்ப்பு குறித்தும் மானம், மரியாதை குறித்தும் மிக மோசமாக திட்டுகிறார்.

ஆனந்தியிடம் ஆறுதலாக பேசும் அப்பா

அந்த சமயத்தில் அங்கு வந்த ஹாஸ்டல் வார்டனையும் அன்புவின் அம்மா மோசமாக திட்டுகிறார். பின், ஆனந்தியை ஹாஸ்டல் வார்டன் திரும்ப ஹாஸ்டலுக்கே அழைத்துச் சென்றார். அங்கு ஆனந்திக்காக காத்திருந்த அவரது அப்பாவை பார்த்ததும் கூனிக் குறுகி நிற்கிறார்.

இதைப் பார்த்த ஆனந்தியின் அப்பா, யாரோ 4 பேர் சொல்றத கேட்டு நான் உன்ன சந்தேகப்படுவோனா என பேசி ஆறுதல் அளிக்கிறார்.

திடீரென வந்து நின்ற அன்பு

இதையடுத்து, ஆனந்தி பழையபடி ஹாஸ்டலிலிலே தங்க வைக்கப்படுகிறாள். அப்போது, அன்புவை எண்ணி வருத்தப்பட்டு ஆனந்தி அவரது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஹாஸ்டலுக்கு வெளியே அன்பு குரல் கேட்கிறது.

மித்ரா கண்ணில் சிக்கிய ஜோடி

ஆனந்தியைக் காண அன்பு, அவரது ஹாஸ்டலுக்கு வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை ஹாஸ்டல் பால்கனியில் இருந்து மித்ரா பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த மித்ரா என்ன செய்யப் போகிறார் என்பது இனிவரும் எபிசோடுகளில் தான் தெரியவரும்.

மகேஷை சுற்றி நடக்கும் சதி

முன்னதாக ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி, மகேஷின் உதவியுடன் அன்பு வீட்டில் வந்து தங்கி இருந்தார். இந்நிலையில், மகேஷ் வாழ்க்கையில் இருந்து அன்புவையும் ஆனந்தியையும் பிரிக்க நினைத்த மித்ரா, மகேஷின் அம்மா, கருணாகரனுடன் சேர்ந்து பல திட்டங்களைத் தீட்டினார்.

தொக்காக சிக்கிய ஆனந்தி

இது எதுவும் வேலைக்கு ஆகாத நிலையில், அன்பு அம்மாவிடமே, ஆனந்தி உங்கள் வீட்டில் இருப்பதாகக் கூறினார் மகேஷின் அம்மா. இதனால், ஆத்திரமடைந்த அன்பு அம்மா, வீட்டின் எல்லா இடங்களிலும் தேடி ஒரு வழியாக ஆனந்தியை கண்டுபிடித்து விட்டார். பின், ஆனந்தியை பாரத்து கோவமடைந்த அவர், மிகவும் மோசமாக திட்டினார்.

ஆனந்தி, என்னைப் பொறுத்தவரை என் குடும்பத்தோட நிம்மதிய கெடுக்க வந்தவ என ஆக்ரோஷமாக பேசுகிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.