போலீஸ் ஸ்டேஷனில் பிரித்து மேயப்படும் சரவண வேலு.. கயலிடம் கெஞ்சும் நண்பர்.. கயல் சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  போலீஸ் ஸ்டேஷனில் பிரித்து மேயப்படும் சரவண வேலு.. கயலிடம் கெஞ்சும் நண்பர்.. கயல் சீரியல் அப்டேட்

போலீஸ் ஸ்டேஷனில் பிரித்து மேயப்படும் சரவண வேலு.. கயலிடம் கெஞ்சும் நண்பர்.. கயல் சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 05, 2024 07:48 AM IST

கயல் சீரியலில் எழிலை மருத்துவமனையில் இருந்து கடத்தியது சரவண வேலு தான் என தெரிந்த கயல், அவர் மீது போலீஸில் புகாரளித்ததால் அவரை போலீஸ்காரர்கள் கொடுரமாக அடித்து விசாரிக்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில் பிரித்து மேயப்படும் சரவண வேலு.. கயலிடம் கெஞ்சும் நண்பர்.. கயல் சீரியல் அப்டேட்
போலீஸ் ஸ்டேஷனில் பிரித்து மேயப்படும் சரவண வேலு.. கயலிடம் கெஞ்சும் நண்பர்.. கயல் சீரியல் அப்டேட்

எழிலுக்கு கத்திகுத்து

இதையடுத்து, அவருடன் நட்பாக பழகும் சரவண வேலுவை நம்பி கயலும் எழிலும் ஊரைச் சுற்றி பார்க்க சென்றனர். அங்கு கயலை அடைய தடையாக இருக்கும் எழிலை சரவண வேலு திட்டம் தீட்டி முகமூடி ரவுடி கும்பலை வரவைத்து தாக்குகிறான். அதில், எழில் கத்திக்குத்து பட்டு சுருண்டு விழுகிறான்.

காணாமல் போன எழில்

இதையடுத்து, எழிலை கயலும் சரவண வேலுவும் சேர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். இந்நிலையில், கயல் நடந்த விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டு, வருவதற்குள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எழிலைக் காணவில்லை.

இதனால், பதறிப்போன கயல், மருத்துவமனை முழுவதும் எழிலை தேடிவிட்டு, மருத்துவர்களிடம் சண்டையிட்டு வருகிறாள். அந்த சமயத்தில், சரவண வேலுவிடம், எழில் காணாமல் போனதற்கு எனக்கு உன் மேல் தான் சந்தேகமாக உள்ளது, என சரவண வேலுவிடம் அவரது நண்பர் கூறுகிறார்.

சரவண வேலு திட்டத்தை அறிந்த கயல்

இது கயலுக்கு தெரியவர, கயல் சரவண வேலுவிடம் எழில் எங்கே என சட்டையைப் பிடித்து கேட்டு வருகிறாள். இதனால், கயலுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சரவண வேலு முழித்து வருகிறான்.

போலீஸில் மாட்டிக் கொண்ட சரவண வேலு

சரவண வேலு தன்னிடம் எப்படி பழகியுள்ளான் என்பதை அறிந்த கயல் கடும் கோபமடைந்து சரவண வேலுவிடம் கேள்வி கேட்டும் சொல்லாததால், அவரைப் பற்றி போலீசில் புகாரளிக்கிறார். அப்போது, சரவண வேலுவை விசாரிக்கும் போலீசார் அவர் எந்த பதிலும் சொல்லாததால் கொடுரமாக அடித்து விசாரிக்கின்றனர்.

கோயிலில் அழும் கயல்

இந்நிலையில், கோயிலில் எப்படியாவது எழில் கிடைத்துவிட வேண்டும் என மனமுறுகி வேண்டிக் கொள்ளும் கயல் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

உதவி கேட்கும் சரவண வேலு நண்பர்

நடப்பதை எல்லாம் பார்க்கும் போது நாம் ஏன் இந்த ஊருக்கு வந்தோம் என இருக்கிறது. இந்த ஊர் ராசியே இல்லாத ஊர். பொங்கல் வைத்துவிட்டு அப்படியே கிளம்பி இருக்க வேண்டும் என அவரது பெரியப்பா சொல்லிக் கொண்டிருக்கும் போது, சரவண வேலுவை போலீஸ் காரர்கள் மிகவும் அடித்து கொடுமை படுத்துவதாகவும் அவரை எப்படியாவது காப்பாற்றுமாரும் அவரது நண்பர் கயலிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

கயலின் முடிவு என்ன?

இதை எல்லாம் கோபமாக கேட்டு வந்த கயல் என்ன முடிவு எடுப்பார், எழிலை காப்பாற்றுவரா, சரவண வேலுவை மன்னிப்பாரா என்பத எல்லாம் இனிவரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.