மித்ராவிற்கு உறுதி அளித்த மகேஷ் அம்மா.. தவிப்பில் அன்பு, ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
மித்ரா தான் தன் வீட்டு மருமகள் என மகேஷின் அம்மா மித்ராவிற்கு வாக்கு கொடுத்துள்ளார்.

மித்ராவிற்கு உறுதி அளித்த மகேஷ் அம்மா.. தவிப்பில் அன்பு, ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
அன்புவும் ஆனந்தியும் காதலிப்பதை அறிந்த அன்பு அம்மா அவருக்கு தன் அண்ணன் மகள் துளசியுடன் கல்யாணம் செய்து வைக்க நினைத்து போட்ட திட்டம் எல்லாம் வீணாகப் போனது.
இதையடுத்து, அன்புவிற்கு இத்தனை நாள் ஆறுதல் சொல்லி வந்த ஆனந்தி தற்போது தீர்க்கமான முடிவையும் எடுத்துள்ளார். அன்பு அம்மாவின் வாயாலேயே அவர் தன்னை மருமகள் என சொல்லும் நாள் வரும் வரை தான் ஓய மாட்டேன் என அன்புவிடம் தன் நண்பர்கள் முன் சவால் விட்டுள்ளார் ஆனந்தி.
மகேஷின் அறிவிப்பு
இதற்கிடையில், இந்நிலையில், கார்மெண்ட்சில் வேலை செய்பவர்களை சந்தித்த மகேஷ் தன் பிறந்த நாள் குறித்த அறிவிப்பை கூறினார்.