தாலி கட்ட தயாரான அன்பு.. துரத்தும் சொந்தங்கள்.. தடுப்பாறா கயல்? கயல் சீரியல் அப்டேட்
ஷாலினியின் அம்மா அன்புவின் காதலை ஏற்க மறுத்ததால் அன்பு ஷாலினியை கூட்டிக் கொண்டு போய் கோயிலில் திருமணம் செய்ய உள்ளார்.
கல்யாணம் ஆகி 10 நாள் முடிவதற்குள் பிறந்த வீடு, புகுந்த வீடு என மாற்றி மாற்றி பிரச்சனைகளை சந்தித்து வந்த கயல், அந்தப் பிரச்சனை எல்லாம் தீர்க்க வேண்டும் என முடிவு செய்து மீண்டும் வேலைக்கு சென்றார்.
நகையை திருடும் கௌதம்
அங்கு, இத்தனை நாள் தன்னை மதிக்காமல் இருந்த கயலை பழிவாங்கும் நோக்கில் டாக்டர் கௌதம், கயலுக்கு பல நெருக்கடிகளையும் அவமானங்களையும் தருகிறான். இத்தனைக்கும் நடுவில், கயல் அவரது தங்கைக்கு வளைகாப்பு செய்ய ஆசைப்பட்டாள். அதற்காக குடும்பத்தினருடன் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், தங்கைக்கும் அவரது கணவருக்கும் நகை வாங்க சென்ற போது, டாக்டர் கௌதம் ஆட்களை வைத்து நகையை திருடி விட்ட கோவத்தில் கயல் உள்ளார்.
கயலுக்கு வந்த அடுத்த பிரச்சனை
இதனால், தன் அலட்சியத்தால் வீட்டில் பிரச்சனை வெடிக்கப் போகிறது என நினைத்து கயலும், மூர்த்தியும் பதற்றத்தோடு நகைத் திபருடர்களை தேடி ஒருவழியாக அதை கண்டுபிடித்தனர். பின் போலீசார் உதவியுடன் நகையையும் மீட்டனர். இதையடுத்து, பிரச்சனை எல்லாம் முடிந்தது என நினைத்தால் அன்புவும் ஷாலினியும் வீட்டை விட்டு ஓடிப்போய் அடுத்த பிரச்சனையை இழுத்துள்ளனர்.
காதலுக்கு பச்சை கொடி
அன்புவும் ஷாலினியும் காதலிப்பதை அறிந்த கயல், அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி தான் காட்டினார். ஆனால், அதற்குள்ளாக சிவசங்கரியின் சூழ்ச்சியால் குழம்பி இருந்த வேதவள்ளி அன்புவும் ஷாலினியும் ஒருவேளை காதலித்தார்கள் என்றால் என்ன செய்வது எனத் தெரியாமல், கயல் அம்மாவை எச்சரித்தார். இது ஷாலினி காதுக்கு சென்றதால் உடனே அன்புவிற்கு தகவல் சொல்லி அவரை வரவழைத்து வீட்டை விட்டு வெளியேறினார்.
தாலிகட்ட தயாரான அன்பு
இதை அறிந்த வேதவள்ளி மற்றும் கயல் குடும்பத்தினர் அன்புவையும் ஷாலினியையும் எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முயற்சி செய்கின்றனர். ஆனால், அதற்குள்ளாக அவர்கள் காரில் தப்பித்து கோயிலுக்கு வந்தனர். இருந்தாலும் ஷாலினுக்கு வீட்டை எதிர்த்து திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனக் கூறி வருகிறார். அவரை சமாதானம் செய்து தாலி கட்ட தயாரானார்.
தடுப்பாறா கயல்
இதை அறிந்த கயலும் மூர்த்தியும் கோயிலுக்கு அவர்களை பின்தொடர்ந்தே வந்தனர். அதற்குள் அன்பு எப்படியாவது ஷாலினியை சமாதானம் செய்து விடலாம் என கையில் தாலியை வைத்துக் கொண்டு பேசி வருகிறார். கோயிலுக்குள் வந்த கயல் அன்புவையும் ஷாலினியையும் பார்த்து ஷாக் ஆகி அப்படியே நிற்கிறார். இதையடுத்து, கயல் அன்புவையும் ஆனந்தியையும் தடுத்து நிறுத்துவாரா அல்லது திருமணம் செய்து வைப்பாரா என்பதை இன்று வெளியாகும் கயல் சீரியலை பொறுத்திருந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்