அன்புவிடம் சவால் விடும் ஆனந்தி.. காதலை சொல்ல துடிக்கும் மகேஷ்.. உண்மையை உடைத்த மித்ரா.. சிங்கப்பெண்ணே சீரியல்..
உங்க அம்மா வாயால் என்னை மருமகளே என கூப்பிட வைக்காமல் நான் ஓய மாட்டேன் என ஆனந்தி அன்புவிடம் சவால் விட்டுள்ளார்.
![அன்புவிடம் சவால் விடும் ஆனந்தி.. காதலை சொல்ல துடிக்கும் மகேஷ்.. உண்மையை உடைத்த மித்ரா.. சிங்கப்பெண்ணே சீரியல்.. அன்புவிடம் சவால் விடும் ஆனந்தி.. காதலை சொல்ல துடிக்கும் மகேஷ்.. உண்மையை உடைத்த மித்ரா.. சிங்கப்பெண்ணே சீரியல்..](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/30/550x309/singapenne_30_12_1735527893044_1735527914848.png)
அன்புவும் ஆனந்தியும் காதலிப்பதை அறிந்த அன்பு அம்மா அவருக்கு தன் அண்ணன் மகள் துளசியுடன் கல்யாணம் செய்து வைக்க நினைத்தாள். இதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் ஆனந்தி நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும். அவள் கண் முன் என் மகனுக்கு திருமணம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஆனந்தியிடம் திமிராகவும் பேசினார்.
கோயிலில் உண்மையை உடைத்த அன்பு
ஆரம்பத்தில் இருந்தே இந்த கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ளாத அன்பு கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் கோவிலிலே வைத்து தனக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை. ஆனந்தியைத் தான் காதலிக்கிறேன் என அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைத்தான். அன்புவின் காதலுக்கு அவரது மாமா சம்மதம் தெரிவித்தாலும் அவர் அம்மா சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அன்பு தன் முடிவில் இருந்து மாறாமல் இருந்தார்.
காதலை சொல்ல துடிக்கும் மகேஷ்
இது ஒருபுறம் இருக்க, அன்புவின் இந்த இக்கட்டான சூழலுக்கு தான் தான் காரணம் என நினைத்து சங்கடப்பட்ட மகேஷ் அவரிடம் மன்னிப்பு கேட்டார். அத்துடன் ஆனந்தியிடம் விரைவில் சில முக்கியமான விஷயங்களை சொல்ல உள்ளதாகவும் கூறினார்.
ஆனந்தி, தன்னை அவர் காதலிப்பதாக மட்டும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக மகேஷை விட்டு தள்ளியே இருந்து வருகிறார். மேலும், அன்புவிற்கு இத்தனை நாள் ஆறுதல் சொல்லி வந்த ஆனந்தி தற்போது தீர்க்கமான முடிவையும் எடுத்துள்ளார்.
சவால் விட்ட ஆனந்தி
அதாவது அன்பு அம்மாவின் வாயாலேயே அவர் தன்னை மருமகள் என சொல்லும் நாள் வரும் வரை தான் ஓய மாட்டேன் என அன்புவிடம் தன் நண்பர்கள் முன் சவாலும் விட்டுள்ளார். இந்நிலையில், கார்மெண்ட்சில் வேலை செய்பவர்களை சந்தித்த மகேஷ் தன் பிறந்த நாள் குறித்த அறிவிப்பை கூறினார்.
மேலும், அந்த நாளில் ஒரு முக்கியமான அறிவிப்பையும் கூறுவதாக அறிவித்தார். அதற்கு கம்பெனியில் வேலை செய்த நபர் ஒருவர் உங்கள் கல்யாண அறிவிப்பா எனக் கேட்க அது சஸ்பென்ஸ் எனக் கூறி உள்ளார். மகேஷின் இந்த வார்த்தைகளால் அன்பு, ஆனந்தி, அவர்களின் நண்பர்களான முத்து, சௌந்தர்யா போன்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகேஷை காதலிக்கும் மித்ரா
இது இப்படி இருக்க, மகேஷின் அம்மா மித்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது, மித்ராவிடம் யாரையாவது காதலிக்கிறியா எனக் கேட்க மித்ராவும் தயங்கி தயங்கி மகேஷை காதலிப்பதாக சொல்கிறார். இதையடுத்து மகேஷின் அம்மா மித்ராவையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்க்கும் போது மகேஷ் ஆனந்தியிடம் காதலை சொல்லும் முன் மித்ராவிற்காக மகேஷ் அம்மா அவரிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் சிங்கப் பெண்ணே சீரியல் பரபரப்பாக செல்ல வாய்ப்புள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்