வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த அன்பு- ஷாலினி.. போற இடம் எல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படி? கயல் சீரியல் அப்டேட்
அன்பு- ஷாலினி திருமணம் நடக்காது என கயலின் அம்மா ஷாலினியிடம் கூறிய நிலையில், அன்பு ஷாலினியை அவரது வீட்டில் இருந்து கூட்டிச் சென்று திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளான்

கல்யாணம் ஆகி 10 நாள் முடிவதற்குள் பிறந்த வீடு, புகுந்த வீடு என மாற்றி மாற்றி பிரச்சனைகளை சந்தித்து வந்த கயல், அந்தப் பிரச்சனை எல்லாம் தீர்க்க வேண்டும் என முடிவு செய்து மீண்டும் வேலைக்கு சென்றார்.
நகையை திருடும் கௌதம்
அங்கு, இத்தனை நாள் தன்னை மதிக்காமல் இருந்த கயலை பழிவாங்கும் நோக்கில் டாக்டர் கௌதம், கயலுக்கு பல நெருக்கடிகளையும் அவமானங்களையும் தருகிறான். இத்தனைக்கும் நடுவில், கயல் அவரது தங்கைக்கு வளைகாப்பு செய்ய ஆசைப்பட்டாள். அதற்காக குடும்பத்தினருடன் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், தங்கைக்கும் அவரது கணவருக்கும் நகை வாங்க சென்ற போது, டாக்டர் கௌதம் ஆட்களை வைத்து கயலிடம் இருந்து நகையை திருடி விட்டான்.
கயலுக்கு வந்த அடுத்த பிரச்சனை
இதனால், தன் அலட்சியத்தால் வீட்டில் பிரச்சனை வெடிக்கப் போகிறது என நினைத்து கயலும், மூர்த்தியும் பதற்றத்தோடு நகைத் திபருடர்களை தேடி ஒருவழியாக அதை கண்டுபிடித்தனர். பின் போலீசார் உதவியுடன் நகையையும் மீட்டனர். இதையடுத்து, பிரச்சனை எல்லாம் முடிந்தது என நினைத்தால் அன்புவும் ஷாலினியும் வீட்டை விட்டு ஓடிப்போய் அடுத்த பிரச்சனையை இழுத்துள்ளனர்.