மொத்தமாக சோலியை முடித்த மகேஷ் அம்மா.. பீதியில் தவிக்கும் தங்கை.. ஆனந்தி கதி என்ன ஆச்சு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மொத்தமாக சோலியை முடித்த மகேஷ் அம்மா.. பீதியில் தவிக்கும் தங்கை.. ஆனந்தி கதி என்ன ஆச்சு?

மொத்தமாக சோலியை முடித்த மகேஷ் அம்மா.. பீதியில் தவிக்கும் தங்கை.. ஆனந்தி கதி என்ன ஆச்சு?

Malavica Natarajan HT Tamil
Dec 02, 2024 01:26 PM IST

ஆனந்தி அன்பு வீட்டில் தான் தங்கி இருக்கிறார் என்ற உண்மையை மகேஷின் அம்மா மிகவும் நாசுக்காக அன்பு அம்மாவிடம் கூறி பிரச்சனையை கிளப்பி உள்ளார்.

மொத்தமாக சோலியை முடித்த மகேஷ் அம்மா.. பீதியில் தவிக்கும் தங்கை.. ஆனந்தி கதி என்ன ஆச்சு?
மொத்தமாக சோலியை முடித்த மகேஷ் அம்மா.. பீதியில் தவிக்கும் தங்கை.. ஆனந்தி கதி என்ன ஆச்சு?

மகேஷ் அம்மாவின் கவலை

இவை அனைத்தும் மகேஷின் அம்மா மற்றும் மித்ரா ஆரம்பித்த பிரச்சனையால் நடந்த முடிவு என்றாலும், அவர்கள் எதற்காக இந்தப் பிரச்சனையை ஆரம்பித்தார்களோ அது நிறைவேறாததால் அவர்களின் கோவம் அதிகரித்துள்ளது.

அன்பு தான் இத்தனை நாளும் அழகனாக நடித்து ஏமாற்றினான் என்பதை அறிந்தால், மகேஷ் கோவப்பட்டு அன்புவுடன் இருக்கும் நட்பை துண்டித்து விடுவான். அவனுக்கு ஆதரவாக இருக்கும் ஆனந்தியையும் மகேஷ் வாழ்க்கையில் இருந்து பிரித்து விடலாம் என இருவரும் திட்டம் தீட்டினர். ஆனால், அதற்கு மாறாக மித்ரா மற்றும் மகேஷின் அம்மா செய்த சூழ்ச்சி அவர்களுக்கு எதிராகவே திரும்ப ஆரம்பித்தது.

அன்பு மேல் அதிகரித்த மரியாதை

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை மகேஷ் கேட்டுவிட்டதால், இத்தனை நாள் அன்பு மேல் வைத்திருந்த சந்தேகத்தை முற்றிலும் நீக்கி, அன்புவை திரும்பவும் தனது கம்பெனிக்கு வேலைக்கு வரவைத்தார்.

அத்துடன், அன்புவை நம்பி ஆனந்தியை அவர் வீட்டிலேயே இருக்குமாறு கூறினார். மேலும், அவரது அம்மாவிடம் ஆனந்தி தான் என்னுடைய காதலி என்றும் கூறினார்.

அன்பு அம்மாவிற்கு தெரிய வரும் உண்மை

இதனால் ஆத்திகரம் தாங்காத அவர், அன்புவின் அம்மாவிடம் ஆனந்திக்கு உங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்த நல்ல மனதை பாராட்டுவதாக பேசி, நாசுக்காக மொத்த உண்மையையும் கூறிவிட்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்புவின் அம்மா, வேகமாக வீட்டிற்கு சென்று அன்புவின் அறையில் உள்ள ஆனந்தியின் பொருட்களை எல்லாம் பார்க்கிறார்.

அத்துடன் ஆனந்தியை அறை முழுவதும் தேடியும் கிடைக்காததால், மாடிக்கு சென்று, அங்கேயும் தேடுகிறார். ஒருவேளை அவர் தண்ணீர் தொட்டிக்குள் இருக்கலாம் என சந்தேகப்பட்ட அவர், ஆனந்தியை கண்டுபிடிக்க மோட்டாரை போடுகிறார்.

இனி நடக்கப் போவது என்ன?

இதனால், என்ன செய்வது எனத் தெரியாமல் அன்புவின் தங்கை முழிக்கிறார். இந்நிலையில், அன்புவின் அம்மா ஆனந்தியை கண்டுபிடிப்பாரா? உண்மை தெரிந்த பின் என்ன செய்வார்? அல்லது அன்பு ஆனந்தியை காப்பாற்றி விடுவாரா? என அடுத்தடுத்த கேள்விகள் எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கான பதிலை தொடர்ந்து சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் பார்த்தால் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.