விடாப்பிடியாக இருக்கும் அன்பு அம்மா.. பக்க பலமாக நின்று ஆறுதல் தரும் மகேஷ்.. அன்பு- ஆனந்தி காதல் கைகூடுமா?
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்புவின் அம்மா, எத்தனை காலம் ஆனாலும் ஆனந்தி இந்த வீட்டின் மருமகளாக வர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தன் மகன் அன்பு, ஆனந்தியை காதலிப்பதை அறிந்த அன்புவின் அம்மா, தன் அண்ணன் மகள் துளசிக்கு அன்புடன் கல்யாணம் செய்ய திட்டமிட்டார். இதற்கு மகேஷையும் துணையாக வைத்துக் கொண்டு காய்களை நகர்த்தினார்.
அவசர திருமண ஏற்பாடு
அம்மாவின் இந்த முடிவால் கொதித்து போய் இருந்த அன்பு அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவித்து போய் நின்றார். இந்த சமயத்தில் தான், யாரும் எதிர்பாராத விதமாக அவசர அவவசரமாக அன்புவிற்கு கல்யாண ஏற்பாடுகளை செய்தார் அவரது அம்மா.
மேலும், அன்பிடம் எதையும் கலந்து ஆலோசிக்காமலே திருமணம் உறுதி செய்யும் நிகழ்ச்சி வரை ஏற்பாடு செய்துள்ளார். அத்துடன் அதை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துவதோடு நில்லாமல் அன்புவின் ஆபிஸில் அனைவருக்கும் கூறி உள்ளார். அத்துடன் ஹாஸ்டலில் இருந்த ஆனந்திக்கு போன் செய்து கட்டாயம் நிகழ்ச்சிக்கு வர வேண்டும். உன் கண் முன் தான் எல்லாம் நடக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
ஆனந்தியை பழிவாங்க துடித்த அன்பு அம்மா
இதையடுத்து, திருமணம் உறுதி செய்யும் நிகழ்ச்சியிலும் ஆனந்தியை பழி வாங்குவதாக நினைத்து எல்லா வேளைகளையும் அவரையே செய்யச் சொல்கிறார். இதனால் கோவத்தின் உச்சிக்கு சென்ற அன்பு, தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றும் ஆனந்தியைத் தான் காதலிப்பதாகவும் அனைவர் முன்னிலையிலும் கூறிவிட்டார். இதை புரிந்துகொண்ட அன்புவின் மாமாவும் அன்பு விருப்பப்பட்ட பெண்ணை திருமணம் செய்துவைக்குமாறு கூறியும் அன்பு அம்மா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
துணையாக நின்ற மகேஷ்
மேலும், ஆனந்தியால் என்னைக்கும் என் வீட்டு மருமகள் ஆக முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் நடந்த விஷயங்களை மகேஷ் கவனித்து வந்துள்ளார். இருந்தும், அவர் அன்பு காதலித்த பெண்ணோடு நிச்சயம் கல்யாணம் நடக்கும். அது என் பொறுப்பு எனக் கூறி நம்பிக்கையும் அளித்துள்ளார். இதை எதிரபாராத ஆனந்தி மகேஷை கையெடுத்து கும்பிட்டார்.
ஆனால், நடந்தது எதையும் அறியாத மகேஷின் அம்மா அந்புவை வைத்து ஆனந்தியையும் மகேஷையும் பிரிக்க தான் போட்ட திட்டங்கள் அனைத்தும் வீணாக மாறியதை நினைத்து புலம்பி வருகிறார். இதுதொடர்பான ப்ரோமோ காட்சிகளை சன் டிவி வெளியிட்டுள்ளது.
அன்பு அம்மாவின் பிளான்
முன்னதாக, ஆனந்தியிடமிருந்து அன்பை நிரந்தரமாக பிரிக்க நினைத்து, அன்புவை அவரது உறவுக்கார பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மா முடிவு செய்துள்ளார்.
ஆனந்தியை தனக்கு தெரியாமல் அன்பு வீட்டிற்குள் தங்க வைத்ததில் இருந்து அவரது அம்மாவிற்கு சொல்ல முடியாத கோவமும் வருத்தமும் அன்பு மேல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அத்துடன் ஆனந்தியிடமிருந்து தன் மகனை பிரித்து அன்புவின் மாமா பெண்ணிற்கே திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டி உள்ளார்.
அம்மாவிடம் சண்டையிட்ட அன்பு
இதற்காக அவர்களை வீட்டிற்கும் அழைத்துள்ளார். இது எதுவுமே தெரியாத அன்பு அவரது அம்மாவிடம் சண்டையிட்டார். இதையடுத்து, நடப்பதை எல்லாம் ஆனந்தியிடம் சொல்லி புலம்புகிறார். அப்போது, ஆனந்தி விரைவில் அம்மாவை சமாதானம் செய்து விடலாம் எனக் கூறுகிறார்.
மகேஷை பார்க்க வரும் அன்பு அம்மா
ஆனால், அன்பு விஷயத்தில் ஆனந்திக்கு துளி கூட இறக்கம் காட்டத அவரது அம்மா, துளசி உடன் கல்யாண பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, கல்யாணத்திற்கான பேச்சுவார்த்தை குறித்து பேச அன்புவின் அபிஸிற்கே வந்துள்ளார். இந்த கல்யாணம் நடக்க மகேஷ் உறுதுணையாக இருப்பதாக கூறிய நிலையில், அன்புவின் அம்மா அவரது மாமாவுடன் மகேஷை சந்திக்க வந்து ஆனந்தியை வெறுப்பேற்றினார்.
டாபிக்ஸ்