கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 26, 2024 01:17 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் தன் மீது விழுந்த பழியை நீக்கி உண்மையை நிரூபிக்க ஒரு மாதம் சாமுண்டீஸ்வரியிடம் அவகாசம் கேட்டுள்ளார் கார்த்திக்.

கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

மகேஷிற்கு ஐடியா கொடுக்கும் சிவனாண்டி

சிவனாண்டி மகேஷிடம் நீ அந்த சாமுண்டீஸ்வரி வீட்ல தான் இருக்கணும்‌‌. இப்போ நிச்சயதார்த்தத்துக்கு போய் போன் பேச போயிருந்தேன் அங்க மயங்கி விழுந்துட்டேன் என்று சொல்லு என சொல்கிறான்.

உடனே மாயா மயங்கி விழுந்ததற்கு காரணம் கார்த்திக் தான் என்று அவன் மீது பழி போட சொல்கிறாள். கார்த்திக் நிறைய குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டான். அவனை அந்த வீட்ல இருந்து விரட்டணும் என சொல்கிறாள்.

கார்த்திக் மேல் விழுந்த பழி

அதைத் தொடர்ந்து மாயா மற்றும் மகேஷ் என இருவரும் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். போன் பேச போயிருந்த இடத்தில் கார்த்திக் தன்னை மயங்க வைத்து விட்டதாக சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர். அதே நேரத்தில் சந்திரகலா எதுக்கு இப்படி சொல்கிறான் என குழப்பம் அடைகிறாள்.

அடுத்து சாமுண்டீஸ்வரி மகேஷ் சொன்னதைக் கேட்டு கார்த்திக்கிடம் கோபப்படுகிறாள். ஆனால் ரேவதி கார்த்திக் அப்படி செய்யற ஆள் கிடையாது என அவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள். 

கார்த்திற்கு கெடு கொடுத்த சாமுண்டேஸ்வரி

இருந்தாலும் சாமுண்டீஸ்வரி கார்த்தியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறாள். ஆனால் கார்த்திக் தீர விசாரிக்காமல் இப்படி முடிவெடுக்காதீங்க என சொல்வதோடு உண்மையை நிரூபிக்க கால அவகாசம் கேட்க சாமுண்டீஸ்வரி ஒரு மாசம் அவகாசம் கொடுக்கிறாள். ஒரு மாசத்துக்குள் உண்மையை நிரூபிக்க தவறினால் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கண்டிஷன் போடுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

புடவையை மாற்றிக் கட்டிய ரேவதி

முன்னதாக, நிச்சயதார்த்தத்திற்காக ரேவதி ஒரு பக்கம் மகேஷ் ஒரு பக்கம் என ரெடியாகி கொண்டிருந்த நிலையில், பரமேஸ்வரி பாட்டி ரேவதி நிச்சயதார்த்தத்திற்கு நான் கொண்டு வந்த புடவையை தான் கட்டிக்கிட்டு, மணமேடை ஏறணும்; முருகா அதுக்கு நீ தான் ஒரு வழி பண்ணனும் என வேண்ட முருகன் என்ன பாட்டி எல்லாத்துக்கும் என்னையே கூப்பிடுவியா? புடவையை மாற்றி வை, நீ யோசிச்சு ஏதாவது செய்.. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறினான்.

அதேபோல் பரமேஸ்வரி பாட்டி யாருக்கும் தெரியாமல் புடவையை மாற்றி வைத்து விடுகிறாள் பிறகு ரேவதி. புடவையை கட்டுவதற்காக எடுக்க புடவை மாறி இருப்பதை பார்த்து குழப்பம் அடைந்தாள். ஆனாலும், இதைத்தான் கட்டிக்கிட்டு மணமேடைக்கு போகணும் போல என நினைத்து புடவையை கட்டிக்கொண்டு வர மகேஷ் காணாமல் போன விஷயம் தெரிகிறது.

வெளிச்சத்திற்கு வரும் உறவு

அதைத்தொடர்ந்து சந்திரகலா கையில் மகேஷ் போன் கிடைக்க, அதில் அவனும், மாயாவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பார்க்க, சந்திரா கலா இவர்களுக்கு இடையே இருக்கும் உறவைப் பற்றி அறிந்து கொள்கிறாள். அதோடு ஒரு குழந்தையை கூப்பிட்டு போனை கொடுத்து சிவனாண்டியிடம் கொண்டு போய் கொடுக்க சொல்கிறாள். மகேஷ் மாயா இடையே இருக்கும் உறவு குறித்து சிவனாண்டிக்கும் தெரிய வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.