மாமியார விட மளிகை சாமான் தான் முக்கியம்.. அட்ராசிட்டி செய்யும் நந்தினி.. எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்..
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மகனை நினைத்து உருகி ஆதி குணசேகரனின் அம்மா உடல்நலமின்றி இருக்கிறார். அவர் மூத்த மருமகள் ஈஸ்வரியை பார்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
ஆதி குணசேகரன் செய்த கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத அவரது மனைவி ஈஸ்வரி அவர் ஜெயலுக்கு போன பிறகு அவருடைய நண்பர் ஜூவாந்தம் உடன் தன் மகளை கூட்டிக் கொண்டு சென்று விட்டார்.
விசாலாட்சி திட்டம்
இப்போது, தன் மகன் விடுதலை ஆக வேண்டும் என்றால் ஈஸ்வரியின் உதவி தேவை என அறிந்து அவரை பார்க்க வேண்டும் என்று ஆதி குணசேகரனின் தாய் விசாலாட்சி திட்டம் போடுகிறாள், இதை உண்மை என நம்பிய தர்ஷன் பாட்டிக்காக தன் அம்மாவிடமே சண்டை போடுகிறார்.
இப்படி தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டதால், தன் மாமியாருடன் பேசும் ஈஸ்வரியிடம் உன்னை பார்க்கணும் போல் இருக்கு. ஒரே ஒரு நாள் வீட்டிற்கு வந்து விட்டு போகும் படி பாவமாக பேசுகிறார் விசாலாட்சி.
முன்னதாக, விசாலாட்சிக்கு உடல்நிலை சரியில்லை எனத் தெரிந்ததும் ஜீவானந்தம் தங்கள் வாழ்க்கையில் வந்ததால் தான் குடும்பத்தில் இத்தனை பிரச்சனையும் நடந்ததாக தர்ஷன் சண்டை போடுகிறான்.
மாமியாரை விட முக்கியம்
அதே சமயத்தில், விசாலாட்சிக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அவரை பார்த்துக் கொள்ளாமல் நந்தினி, ரேணுகா, ஜனனி என எல்லோரும் சமையல் அறையில் அவர்கள் வேலை பற்றி பேசி வருகின்றனர். அப்போது, மசாலா பொருள் விற்பனைக்காக மல்லி ஆர்டர் செய்து கொண்டிருப்பார் நந்தினி. இதைப்பார்த்த கரிகாலன் மாமியாரை விட மல்லி தான் முக்கியமா எனக் கேட்பார். அதற்கு நந்தினி ஆமாம் என சொன்னதும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஆதி குணசேகரனுக்காக பேசும் சொந்தங்கள்
முன்னதாக வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமயலறையிலேயே கிடந்த பெண்கள் அவர்களுக்கென வேலையை தேடி அதை செய்ய ஆரம்பித்தனர்.
இதனால், வீட்டோடு மாப்பிள்ளையாக வந்த ஆதிரையின் கணவர் கரிகாலன் தான் சமைப்பது, தேவையான வேலைகளை செய்வது என எடுபிடியாக இருந்து வருகிறார். நிலைமை இப்படி இருக்க, ஆதி குணசேகரனின் சொந்தங்கள் சிலர், ஏன் இன்னும் குணசேகரனை பெயிலில் எடுக்க வில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குணசேகரன் ஜெயிலிலேயே இருந்தால் தான் நீங்க சொகுசா இருக்க முடியும்ன்னு நெனச்சிட்டு அப்படியே விட்டுட்டிங்களா என்றும் கேட்டனர்.
தவிக்கும் தம்பிகள்
இதனால், ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டனர். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடு வருகிறோம். ஆனா, இந்த வீட்ல இருக்க பொம்பளைங்க எல்லாம் அவர் வெளிய வந்தா எங்கள கொன்னுடுவாருன்னு சொல்லி சொல்லியே பெயில் தரவிடாம பண்றாங்க என தங்கள் பக்கத்து நியாயத்தை கூறினர்.
அப்போது, கரிகாலன், அவருக்கு பெயில் கிடைப்பதற்கு பதிலா பரோலுக்கு ஏற்பாடு பண்ணலாம் என ஐடியா தர அதில் இருக்கும் சட்ட நடைமுறையை கூறி ஆஃப் செய்தனர்.
நெஞ்சுவிலியில் துடிக்கும் விசாலாட்சி
இதையடுத்து, நான் வேண்டுமானல் ஏதாவது பண்ணிக்குறேன் அப்போ அவருக்கு பரோல் தருவாங்களா எனகேட்கிறார். இதனால் கோவமான ஞானம், நீ என்ன அவருக்கு புள்ளையா குட்டியா? அண்ணன் வெளிய வரணும்ன்னா அவங்க புள்ளைங்களுக்கு எதாவது ஆகணும். இல்ல இந்த வீட்ல யாராவது சாகணும்ன்னு சொல்கிறார்.
இதைக் கேட்ட ஆதி குணசேகரனின் அம்மா விசாலாட்சி மனம் வருந்துகிறார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி வந்தது போல் தெரிகிறது.
டாபிக்ஸ்