அன்பு நிச்சயதார்த்தத்தில் வெளிவரும் உண்மைகள்.. உடைந்து போன மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அன்பு நிச்சயதார்த்தத்தில் வெளிவரும் உண்மைகள்.. உடைந்து போன மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

அன்பு நிச்சயதார்த்தத்தில் வெளிவரும் உண்மைகள்.. உடைந்து போன மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 25, 2024 07:39 AM IST

அன்புவை தன் அண்ணன் மகளுக்கு திருமணம் செய்ய வைக்க நினைத்த அவரது அம்மாவிற்கு மட்டுமலல்லாமல் அங்கு வந்த அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார் அன்பு.

அன்பு நிச்சயதார்த்தத்தில் வெளிவரும் உண்மைகள்.. உடைந்து போன மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
அன்பு நிச்சயதார்த்தத்தில் வெளிவரும் உண்மைகள்.. உடைந்து போன மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

அன்புவை எச்சரிக்கும் அம்மா

என்னால நாளைக்கு கோவிலுக்கு வர முடியாது. துளசிய கல்யாணம் பண்ண சம்மதம் சொல்ல முடியாது என அன்பு அவர் அம்மாவிடம் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்ட அன்பு அம்மா, அப்போ நீ என்ன உயிரோடவே பாக்க முடியாது எனக்கூறி அன்பு தலையில் குண்டைத் தூக்கி போடுகிறார்,

அம்மாவின் பேச்சால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கும் அன்பு ஆனந்திக்கு போன் செய்து நடந்தவற்றை கூறுகிறார். இதைக் கேட்ட ஆனந்தி துக்கம் தாங்க முடியாமல் அழுதுகொண்டே நம்ம காதல் எல்லாம் பெருசு இல்ல. நாளைக்கு நடக்குறது நடக்கட்டும் அதுக்கு அப்புறம் ஆண்டவன் விட்ட வழின்னு சொல்லி அழுகிறாள்.

கதறி அழும் ஆனந்தி

பின், ஹாஸ்டலில் அழுது கொண்டே இருந்த ஆனந்தியிடம் அவரது நண்பர்கள் நடந்தவற்றை விசாரிக்கின்றனர், அப்போது, அன்புவிற்கு வேறொரு பெண்ணோடகல்யாணம் நடக்க போகுதுன்னு கேக்க கூட என்னால முடியல எனக் கூறி அழுகிறாள்.

இந்நிலையில், அன்பு அம்மா செய்த வேலையால் மனமுடைந்து அழுது கொண்டிருந்த ஆனந்திக்கு திடீரென போன் ஒன்று வருகிறது. அதில் பேசியவர் அன்பு அம்மா தான். அவர் நாளை கோவிலில் தன் அண்ணன் மகள் துளசிக்கும் அன்புவிற்கும் வெற்றிலை பாக்கு மாற்றுகிறோம்.

கோயில்லுக்கு வந்தே ஆகணும்

நீ நிச்சயம் கோவிலுக்கு வர வேண்டும். உன் கண் முன்னே தான் பாக்கு தட்டு மாற்ற வேண்டும் . அதற்காக நீ நிச்சயம் அங்கு இருக்கனும் என கண்டிப்பாக பேசினார். இது ஆனந்திக்கு மேலும் மன வருத்தத்தை அளித்தது.

இதையடுத்து ஆனந்தி அன்புவின் நிச்சயத்திற்கு செல்வாளா அங்கு என்ன நடக்கும் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வரும் நிலையில், ஆனந்தி அன்புவின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க கோயிலுக்கு வருகிறார். ஆனந்தியை பார்த்த அன்புவால் தன் மாமா மற்றும் நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்களிடம் உண்மையை மறைக்க முடியவில்லை.

ஆனந்திய தான் காதலிக்குறேன்

அதனால் தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. நான் ஆனந்தியைத் தான் காதலிக்கிறேன். அவங்கள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என அத்தனை பேர் முன்னிலையிலும் கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்தவர் திகைத்து நிற்கின்றனர்.

மகேஷிற்கு விழுந்த பேரிடி

அதே சமயத்தில் அன்புவின் நிச்சயதார்த்தத்திற்காக ஆசை ஆசையாய் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும் மகேஷ் சாருக்கும் அன்புவின் வார்த்தை பேரிடியாய் உள்ளே இறங்குகிறது.

இந்நிலையில், இதுதொடர்பான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நிச்சயம் இந்த ஸ்பெஷல் ப்ரோமோவில் உள்ள காட்சிகள் எள்லாம் ஆனந்திக்கோ அல்லது அன்புவிற்கோ கனவாக வ ந்த காட்சிகளாக இருக்கலாம் என பலரும் கூறி வருகின்பனர்

அன்பு அம்மாவின் பிளான்

ஆனந்தியிடமிருந்து அன்பை நிரந்தரமாக பிரிக்க நினைத்து, அன்புவை அவரது உறவுக்கார பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மா முடிவு செய்துள்ளார்.

ஆனந்தியை தனக்கு தெரியாமல் அன்பு வீட்டிற்குள் தங்க வைத்ததில் இருந்து அவரது அம்மாவிற்கு சொல்ல முடியாத கோவமும் வருத்தமும் அன்பு மேல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அத்துடன் ஆனந்தியிடமிருந்து தன் மகனை பிரித்து அன்புவின் மாமா பெண்ணிற்கே திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டி உள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.