சரவண வேலூவைக் கண்டிக்கும் கயல் அம்மா.. கொதிக்கும் எழில்.. கயல் சீரியல் அப்டேட்..
சரவண வேலு அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது கயல் வாழ்க்கையை பாதிக்கும் என அறிந்து கயலின் அம்மா சரவண வேலுவை இனி வீட்டிற்கு வர வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
கயல் அவரது சொந்த ஊருக்கு சென்ற சமயத்தில் இருந்தே கயலை எப்படியாவது எழிலிடம் இருந்து பிரி்த்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என சரவண வேலு திட்டம் தீட்டி வருகிறான்.
இதற்காக அவர் அவரது ஊரிலிருந்து சென்னை புறப்பட்டும் வந்திருக்கிறான். மேலும், கயலுக்கு தன் மேல் நல்ல அபிப்பிரயாம் வர வேண்டும் என்பதற்காக மூர்த்தி மக்ளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவது, அடிக்கடி வீட்டிற்கு வருவது என பல வேலைகளை செய்து வருகிறார்.
கண்டிக்கும் கயல் அம்மா
ஆனால், சரவண வேலுவின் திட்டத்தை அறிந்த எழிலால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சரவண வே்லு வீட்டிற்கு வருவதை ஏற்க முடியாமல் கயலுடன் வாக்குவாதம் செய்கிறார்.
இதை எல்லாம் கவனித்த கயலின் அம்மா வீட்டிலிருந்து கிளம்பிய சரவண வேலுவை தனியாக அழைத்து இனி அடிக்கடி வீட்டிற்கு வர வேண்டாம். இது கயலின் வாழ்க்கையை பாதிக்கிறது. கயல் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனி இங்கு வரவேண்டாம் எனக் கூறிவிட்டார். இதனால் சரவண வேலு வாடிய முகத்துடன் காணப்பட்டார்.
போஸ்டிங் வந்ததும் கல்யாணம் தான்
இது ஒரு பக்கம் இருக்க, அன்புவும் ஷாலினியும் காதலிப்பதை அறிந்த கயல் நேரடியாக ஷாலினியின் அம்மா வேதவள்ளியிடமே சென்று, அன்புவிற்கு போலிஸ் டிரெயினிங் முடிந்து போஸ்டிங் போட்ட உடனே நிச்சயம் இவர்கள் இருவரின் திருமணம் நடக்கும் என முன்பே எச்சரித்திருந்தார்.
இதனால் வேதவள்ளி உச்சகட்ட கோவத்தில் இருந்த நிலையில், தற்போது விக்னேஷும் அன்பு, ஷாலினி காதலுக்கு ஆதரவு தெரிவித்து விட்டார். இதனால், தனி ஆளாக எப்படி அன்பு, ஷாலினி காதலை பிரிப்பது என்ற குழப்பத்தில் வேதவள்ளி இருக்கிறார்.
மீண்டும் சண்டை போட்ட வேதவள்ளி
முன்னதாக, கயலின் அண்ணன் மூர்த்தி கத்திக் குத்து பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்தில் கூட வேதவள்ளி, அன்புவின் வளர்ப்பு குறித்து தவறாக பேசி, இனி உங்கள் குடும்பத்துடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றார். பின் மூர்த்தியை காப்பாற்ற இருவரும் வந்தது தெரிந்து மன்னிப்பு கேட்டார்.
இப்போது, மீண்டும் கயல் வீட்டிற்கு சென்று, என் மகள் ஷாலினி பக்கம் உங்கள் மகன் அன்பு வந்தால் பழைய வேதவள்ளியை பார்க்க வேண்டி இருக்கும் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால், மனமுடைந்து போன கயலின் அம்மா அதை கயலிடம் சொல்கிறாள்.
இதைக் கேட்ட கயல், அன்புவிற்கு உண்மையிலேயே ஷாலினியை பிடித்திருந்தால் அன்புவிற்கு போலிஸ் போஸ்டிங் வந்த அடுத்த நொடி அவனுக்கு துணையாக நான் நிற்பேன் என கூரி சவால் விட்டாள்.
சுப்ரமணியுடன் வாக்குவாதம் செய்த கயல்
இதைத்தொடர்ந்து. தன் பெரியப்பா மகன் சுப்ரமணிக்கு தன் மீது இருக்கும் கோவத்தில் எந்த நியாயமும் இல்லை. எனக் கூறி அவரிடம் கயல் சண்டை போட்டு வருகிறார், சுப்ரமணி போலிஸ் ஆக வேண்டும் என்ற கனவு கயலால் தான் தகரந்து போனது என்றும், அவரது அப்பா தர்மலிங்கம், அம்மா வடிவும் கயல் குடும்பத்திற்கு எதிரான சிந்தனையை ஊட்டி ஊட்டி வளர்த்ததாலும் தான் சுப்ரமணி தற்போது இப்படி நிற்கிறான். இவன் கயல் மீது உள்ள கோவத்தை தவிர்த்து அழரது அப்பா அம்மா போல் கயல் குடும்பத்திற்கு ஆதரவாக மாறுவானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டாபிக்ஸ்