ஜெயிலில் தவிக்கும் ஆதி குணசேகரன்.. பிள்ளையை காப்பாற்ற திட்டம் போடும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் 2 அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஜெயிலில் தவிக்கும் ஆதி குணசேகரன்.. பிள்ளையை காப்பாற்ற திட்டம் போடும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் 2 அப்டேட்

ஜெயிலில் தவிக்கும் ஆதி குணசேகரன்.. பிள்ளையை காப்பாற்ற திட்டம் போடும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் 2 அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 25, 2024 08:27 AM IST

6 மாதமாக சிறையில் இருக்கும் ஆதி குணசேகரனை எப்படியாவது வெளியில் எடுக்க அவரது தம்பிகள் போராடும் நிலையில், ஈஸ்வரியை வரவைக்க விசாலாட்சி திட்டம்

ஜெயிலில் தவிக்கும் ஆதி குணசேகரன்.. பிள்ளையை காப்பாற்ற திட்டம் போடும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் 2 அப்டேட்
ஜெயிலில் தவிக்கும் ஆதி குணசேகரன்.. பிள்ளையை காப்பாற்ற திட்டம் போடும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் 2 அப்டேட்

இதையடுத்து, வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமயலறையிலேயே கிடந்த பெண்கள் அவர்களுக்கென வேலையை தேடி அதை செய்ய ஆரம்பித்தனர்.

ஆதி குணசேகரனுக்காக பேசும் சொந்தங்கள்

இதனால், வீட்டோடு மாப்பிள்ளையாக வந்த ஆதிரையின் கணவர் கரிகாலன் தான் சமைப்பது, தேவையான வேலைகளை செய்வது என எடுபிடியாக இருந்து வருகிறார். நிலைமை இப்படி இருக்க, ஆதி குணசேகரனின் சொந்தங்கள் சிலர், ஏன் இன்னும் குணசேகரனை பெயிலில் எடுக்க வில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குணசேகரன் ஜெயிலிலேயே இருந்தால் தான் நீங்க சொகுசா இருக்க முடியும்ன்னு நெனச்சிட்டு அப்படியே விட்டுட்டிங்களா என்றும் கேட்டனர்.

தவிக்கும் தம்பிகள்

இதனால், ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டனர். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடு வருகிறோம். ஆனா, இந்த வீட்ல இருக்க பொம்பளைங்க எல்லாம் அவர் வெளிய வந்தா எங்கள கொன்னுடுவாருன்னு சொல்லி சொல்லியே பெயில் தரவிடாம பண்றாங்க என தங்கள் பக்கத்து நியாயத்தை கூறினர்.

அப்போது, கரிகாலன், அவருக்கு பெயில் கிடைப்பதற்கு பதிலா பரோலுக்கு ஏற்பாடு பண்ணலாம் என ஐடியா தர அதில் இருக்கும் சட்ட நடைமுறையை கூறி ஆஃப் செய்தனர்.

நெஞ்சுவிலியில் துடிக்கும் விசாலாட்சி

இதையடுத்து, நான் வேண்டுமானல் ஏதாவது பண்ணிக்குறேன் அப்போ அவருக்கு பரோல் தருவாங்களா எனகேட்கிறார். இதனால் கோவமான ஞானம், நீ என்ன அவருக்கு புள்ளையா குட்டியா? அண்ணன் வெளிய வரணும்ன்னா அவங்க புள்ளைங்களுக்கு எதாவது ஆகணும். இல்ல இந்த வீட்ல யாராவது சாகணும்ன்னு சொல்கிறார்.

இதைக் கேட்ட ஆதி குணசேகரனின் அம்மா விசாலாட்சி மனம் வருந்துகிறார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி வந்தது போல் தெரிகிறது. இதைப் பார்த்த எல்லோரும் அவரை கைத்தாங்கலாக பிடித்து அமர வைத்து தண்ணி எல்லாம் கொடுத்தனர்.

கோவப்படும் ஆதிரை

இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்ட கரிகாலன், அப்பத்தா குணசேகரன் மாமா வரணும்ங்குறத்துக்காக எதாவது பண்ணி வச்சிறாத என சொல்ல அங்கிருந்தவர்கள் அவரை வசை பாடினர்.

இந்த சமயத்தில், தான் வெளியில் சென்று வந்த நந்தினி, ரேணுகா, ஜனனி ஆகிய 3 மருமகள்களும் வீட்டிற்கு வந்த போது, அவரது அத்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்தனர்,

தன் அம்மாவிற்கு இப்படி ஆனதை எதிர்பாராத ஆதிரை, இனி நீங்கள் யாரும் என் அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன் என சவால் விட்டார்.

ஈஸ்வரியை கேட்கும் விசாலாட்சி

இதற்கிடையில், ஜனனி விசாலாட்சியிடம் உங்களுக்கு என்ன பண்ணுது என்ன வேண்டும் என விசாரிக்கிறார். அப்போது அவர் தன் மூத்த மருமகளான ஈஸ்வரியை பார்க்கணும் என கூறுகிறார்.

ஈஸ்வரி ஆதி குணசேகரன் கைதானதற்கு பின் ஜீவானந்தம், அலரது மகள், மற்றும் தன் மகளுடன் வீட்டை விட்டு கிளம்பி விட்டார். அவர்கள் அனைவரும் மலை கிராமத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர். அங்குள்ள குழந்தைகளுக்கு ஈஸ்வரி பாடம் நடத்தி வருகிறாள்.

இந்நிலையில், உடல் நலம் சரியில்லாத தன் மாமியாருக்காக ஈஸ்வரி மீண்டும் வீட்டிற்கு வருவாரா, அவரது கணவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை இனி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.