அன்புக்கு கல்யாண தேதி குறிக்கும் அம்மா.. தவிக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அன்புக்கு கல்யாண தேதி குறிக்கும் அம்மா.. தவிக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

அன்புக்கு கல்யாண தேதி குறிக்கும் அம்மா.. தவிக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 23, 2024 08:36 AM IST

ஆனந்தியிடமிருந்து அன்பை நிரந்தரமாக பிரிக்க நினைத்து, அன்புவை அவரது உறவுக்கார பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மா முடிவு செய்துள்ளார்.

அன்புக்கு கல்யாண தேதி குறிக்கும் அம்மா.. தவிக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
அன்புக்கு கல்யாண தேதி குறிக்கும் அம்மா.. தவிக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

அம்மாவிடம் சண்டையிட்ட அன்பு

இதற்காக அவர்களை வீட்டிற்கும் அழைத்துள்ளார். இது எதுவுமே தெரியாத அன்பு அவரது அம்மாவிடம் சண்டையிட்டார். இதையடுத்து, நடப்பதை எல்லாம் ஆனந்தியிடம் சொல்லி புலம்புகிறார். அப்போது, ஆனந்தி விரைவில் அம்மாவை சமாதானம் செய்து விடலாம் எனக் கூறுகிறார்.

மகேஷை பார்க்க வரும் அன்பு அம்மா

ஆனால், அன்பு விஷயத்தில் ஆனந்திக்கு துளி கூட இறக்கம் காட்டத அவரது அம்மா, துளசி உடன் கல்யாண பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, கல்யாணத்திற்கான பேச்சுவார்த்தை குறித்து பேச அன்புவின் அபிஸிற்கே வந்துள்ளார். இந்த கல்யாணம் நடக்க மகேஷ் உறுதுணையாக இருப்பதாக கூறிய நிலையில், அன்புவின் அம்மா அவரது மாமாவுடன் மகேஷை சந்திக்க வந்தார்.

ஆனந்திக்கு இனிப்பு கொடுக்கும் அன்பு அம்மா

அங்கு ஆனந்தியை பார்த்த அன்புவின் அம்மா அன்புவிற்கு கல்யாணம் செய்ய உள்ளதாகக் கூறி ஆனந்திக்கு வேண்டும் என்றே இனிப்பு கொடுத்து தன் கோவத்தை தீர்த்துள்ளார். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

ஏழாம் பொருத்தம்

முன்னதாக, கிராமத்தில் உள்ள தனது குடும்ப கஷ்டத்தை போக்க கார்மெண்ட்ஸ் பணியில் சேர்கிறார் ஆனந்தி. இவரை பட்டிக்காடு என கிண்டல் செய்யும் கார்மெண்ட்ஸ் சூப்பர் வைசர் கருணாகரணும், அவருடன் ஹாஸ்டலில் இருக்கும் மித்ராவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம் தான்.

மட்டம் தட்டும் கருணாகரன்

இதனால், ஆரம்பத்தில் இருந்தே ஆனந்தியை இந்தக் கம்பெனியில் இருந்து வெளியேற்ற பல முயற்சிகளை செய்கின்றனர். அதுமட்டுமின்றி, கார்மெண்ட்ஸில் டைலர் வேலைக்கு வந்த ஆனந்தியை மட்டம் தட்டி வேறு வேலைக்கு அமர்த்துகிறார். இவை எதுவும் அறியாமல் இருந்த கம்பெனியின் ஒனர் மகேஷிற்கு மெல்ல மெல்ல ஆனந்தி மேல் காதல் வந்தது. இதை தன் தோழி மித்ராவிடம் சொல்ல, அவள் மேலும் ஆனந்தி மீது கோவமடைகிறார்.

சவாலில் வென்ற ஆனந்தி

இதற்கிடையில், ஆனந்தியை கம்பெனியை விட்டு விரட்ட நினைத்தால், அவரை ஏன் டைலராக வேலை செய்ய விடவில்லை என மகேஷ் கேட்க அப்போதே நடத்தப்பட்ட போட்டியில் அதிக துணிகளை தைத்து சதித் திட்டங்களுக்கு மத்தியிலும், தன் கை உடைந்த நிலையிலும் ஜெயித்து மித்ரா மற்றும் கருணாகரன் முகத்தில் கரியை பூசினார் ஆனந்தி. அதுமட்டுமின்றி, சொன்னபடியே, தன் அக்காவின் திருமணத்திற்காக போட்டியில் ஜெயித்து 7 லட்ச ரூபாயும் வென்று சந்தோஷத்தில் இருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.