வீடேறி போய் வேதவள்ளியை வம்பிழுக்கும் கயல்.. பதறும் அம்மா.. கயல் சீரியல் அப்டேட்..
தன் தம்பி அன்பிற்கும் வேதவள்ளியின் மகள் ஷாலினிக்கும் விரைவில் கல்யாணம் செய்ய உள்ளதாக கயல், வேதவள்ளி வீட்டிலேயே போய் சொல்லி உள்ளார்.
தன்னை அறைந்த கயலை பழிவாங்குவதே நோக்கமாகக் கொண்டிருந்த சிவசங்கரி, கயலிடமிருந்து எழிலைப் பிரித்து எப்படியாவது தீபிகாவிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களைத் தீட்டினார். ஆனால், அத்தனையும் தகர்த்து எறிந்து கயலும் எழிலும் பலகட்ட போராட்டங்களுக்கு மத்தியில் கல்யாணம் செய்து கொண்டனர்.
அம்மாவுடன் சண்டை
இதற்கிடையில், கயலின் சொந்த ஊருக்கு சென்றபோது, தன் அம்மா கயலுக்கு எதிராக செய்த அத்தனை சதிகளையும் அறிந்த எழில் அதிர்ச்சி அடைந்தார். அத்தோடு நில்லாமல் அதுபற்றி கேள்வி எழுப்பி தன் அம்மாவிடம் சண்டையும் போட்டார்.
ஆறுதல் சொன்ன எழில்
இதையடுத்து ஆத்திரம் தாங்க முடியாத எழில், இனி நான் உங்கள் மகனே இல்லை எனக் கூரி கயலுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால், சிவசங்கரிக்கு கயல் மீது உள்ள கோவம் மேலும் அதிகரித்தது.
பக்கா பிளானில் சிவசங்கரி
தன் மகன் எழிலை வீட்டை விட்டு கூட்டிச் சென்ற கயல் குடும்பத்தை பழிவாங்கும் குறிக்கோளில் இருந்த சிவசங்கரி, கயலின் அத்தை வேதவள்ளியை தன் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறாள். ஏற்கனேவே, கயலின் அத்தை வேதவள்ளிக்கு அவரது மகள் ஷாலினியும் கயலின் தம்பி அன்புவும் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்து வந்தது. இதற்காக கயல் குடும்பத்துடன் பலமுறை சண்டையும் போட்டிருக்கிறார். இதை வாய்ப்பாக பயன்படுத்தி, அவர்கள் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
மீண்டும் சண்டை போட்ட வேதவள்ளி
கயலின் அண்ணன் மூர்த்தி கத்திக் குத்து பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்தில் கூட வேதவள்ளி, அன்புவின் வளர்ப்பு குறித்து தவறாக பேசி, இனி உங்கள் குடும்பத்துடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றார். பின் மூர்த்தியை காப்பாற்ற இருவரும் வந்தது தெரிந்து மன்னிப்பு கேட்டார்.
இப்போது, மீண்டும் கயல் வீட்டிற்கு சென்று, என் மகள் ஷாலினி பக்கம் உங்கள் மகன் அன்பு வந்தால் பழைய வேதவள்ளியை பார்க்க வேண்டி இருக்கும் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால், மனமுடைந்து போன கயலின் அம்மா அதை கயலிடம் சொல்கிறாள்.
இதைக் கேட்ட கயல், அன்புவிற்கு உண்மையிலேயே ஷாலினியை பிடித்திருந்தால் அன்புவிற்கு போலிஸ் போஸ்டிங் வந்த அடுத்த நொடி அவனுக்கு துணையாக நான் நிற்பேன் என கூரி சவால் விட்டாள்.
வேதவள்ளி வீட்டிற்கே சென்ற கயல்
இந்நிலையில், ஷாலினிக்கு எப்படியாவது வேறு திருமணம் செய்து வைக்க துடிக்கும் வேதவள்ளியின் திட்டத்தை அறிந்துகொண்ட கயல், அவரது அம்மாவுடன் வேதவள்ளி வீட்டிற்கு செல்கிறாள். அப்போது அங்கு வேதவள்ளி வீட்டிற்கு வந்தவர்களிடம் தன் தம்பி அன்பு போலிஸ் டிரெயினிங் முடித்து போஸ்டிங் வாங்கிய உடன் அவருக்கும் ஷாலினிக்கும் தான் கல்யாணம் நடக்கும் எனச் சொல்கிறாள்.
ஆத்திரமடைந்த வேதவள்ளி
இதைக் கேட்ட வேதவள்ளி ஆத்திரமடைந்து கயலை தனியாக அழைத்து எச்சரிக்கிறாள். திட்டம் போட்டு வேண்டுமென்றே வீட்டிற்கு வந்தவர்கள் முன் ஷாலினி கல்யாணப் பேச்சை எடுத்ததாகவும் இந்த மாதிரி அதிகபிரசங்கி தனம் செய்தால் தனக்கு பிடிக்காது என்றும் சண்டை இடுகிறாள். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
டாபிக்ஸ்