கேட்டது ஒன்னு.. கிடைச்சது ஒன்னு.. ஆனந்தியை சுற்றி சுற்றி அடிக்கும் துயரம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
சிங்கப்பெண்ணே சீரியலில், அன்புவின் அம்மாவை எப்படியாவது சமாதானம் செய்யலாம் என காத்திருந்த ஆனந்திக்கு தன் காதலை சொல்லி ஷாக் கொடுக்கிறார் மகேஷ்.

கிராமத்தில் உள்ள தனது குடும்ப கஷ்டத்தை போக்க கார்மெண்ட்ஸ் பணியில் சேர்கிறார் ஆனந்தி. இவரை பட்டிக்காடு என கிண்டல் செய்யும் கார்மெண்ட்ஸ் சூப்பர் வைசர் கருணாகரணும், அவருடன் ஹாஸ்டலில் இருக்கும் மித்ராவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம் தான்.
மட்டம் தட்டும் கருணாகரன்
இதனால், ஆரம்பத்தில் இருந்தே ஆனந்தியை இந்தக் கம்பெனியில் இருந்து வெளியேற்ற பல முயற்சிகளை செய்கின்றனர். அதுமட்டுமின்றி, கார்மெண்ட்ஸில் டைலர் வேலைக்கு வந்த ஆனந்தியை மட்டம் தட்டி வேறு வேலைக்கு அமர்த்துகிறார். இவை எதுவும் அறியாமல் இருந்த கம்பெனியின் ஒனர் மகேஷிற்கு மெல்ல மெல்ல ஆனந்தி மேல் காதல் வந்தது. இதை தன் தோழி மித்ராவிடம் சொல்ல, அவள் மேலும் ஆனந்தி மீது கோவமடைகிறார்.
சவாலில் வென்ற ஆனந்தி
இதற்கிடையில், ஆனந்தியை கம்பெனியை விட்டு விரட்ட நினைத்தால், அவரை ஏன் டைலராக வேலை செய்ய விடவில்லை என மகேஷ் கேட்க அப்போதே நடத்தப்பட்ட போட்டியில் அதிக துணிகளை தைத்து சதித் திட்டங்களுக்கு மத்தியிலும் ஜெயித்தார் ஆனந்தி. இவர், போட்டியில் தான் கலந்து கொள்ளக் கூடாது என நினைத்து மித்ரா ஹாஸ்டலில் வழுக்கி விழ வைத்து தன் கை காலைகளை உடைத்த போதும் கூட போட்டியில் ஜெயிக்க வேண்டும் என பாடுபட்டு ஜெயித்தார்.