ஆசை ஆசையாய் வந்த சரவண வேலு.. பளார் விட்ட கயல்.. வேவு பார்க்கும் எழில்.. கயல் சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆசை ஆசையாய் வந்த சரவண வேலு.. பளார் விட்ட கயல்.. வேவு பார்க்கும் எழில்.. கயல் சீரியல் அப்டேட்

ஆசை ஆசையாய் வந்த சரவண வேலு.. பளார் விட்ட கயல்.. வேவு பார்க்கும் எழில்.. கயல் சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 21, 2024 06:45 AM IST

கயலை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சரவண வேலுவை கயல் நரு ரோட்டில் பளார் என அறைகிறாள்.

ஆசை ஆசையாய் வந்த சரவண வேலு.. பளார் விட்ட கயல்.. வேவு பார்க்கும் எழில்.. கயல் சீரியல் அப்டேட்
ஆசை ஆசையாய் வந்த சரவண வேலு.. பளார் விட்ட கயல்.. வேவு பார்க்கும் எழில்.. கயல் சீரியல் அப்டேட்

அங்கு இருக்கும் போது தான் தன்னை சுற்றி சுற்றி வந்து தொந்தரவு கொடுத்தார் என்றால், அவர்கள் திரும்ப சென்னைக்கு வந்தும் விடாமல் துறத்திக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

ஏற்கனவே, கடன் பிரச்சனை, அப்பா மீது விழுந்த பழியை சரிசெய்யும் பிரச்சனை, எழில் அம்மாவோடு பிரச்சனை, எழில் அம்மா வெளியிட்ட வீடியோவால் பிரச்சனை என போய் கொண்டிருக்கும் சூழலில் கயலுக்கு புதிதாக வந்து நிற்கிறது இந்தப் பிரச்சனை.

மீண்டும் வேலைக்கு போகும் கயல்

கல்யாணம் ஆகி 10 நாள் கூட முழுதாக முடியாத நிலையில், தன்னை சுற்றி வரும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கயல் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார். அங்கு சென்ற முதல் நாளை சண்டை தான். இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கயல், மூர்த்தியின் குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கடட் கிளம்புகிறாள். அங்கு போய் பார்த்தால் அவளுக்கு முன்பே சரவண வேலு குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டி உள்ளான்.

அப்செட் ஆக்கிய சரவண வேலு

அதற்கு நன்றி சொன்ன கயலிடம் நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தாலும் இப்படி தான் செய்திருப்பேன் என பேசி அப்செட் ஆக்கி உள்ளான்.

இதுகுறித்து கயல், எழிலிடம் கூற சரவண வேலு உன்னிடம் பழகும் நோக்கம் சரியானது அல்ல. அவனிடமிருந்து தள்ளியே இருக்குமாறு அறிவுரை வழங்குகிறான். ஆனால், எழிலின் வார்த்தையை கயல் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறாள்

இந்நிலையில், இன்றைய கயல் சீரியல் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில், கயல் வெளியில் கிளம்பும் போது, அவருடன் வர சரவண வேலுவும் திட்டம் தீட்டுகிறான்.

ஃபாலோ பண்ணிய எழில்

இதை கவனித்த எழில், கயலை ஆட்டோவில் ஃபாலோ செய்து வந்து கொண்டிருக்கிறான். அப்போது சரவண வேலு, கயலிடம் நான் உன்னிடம் ஒன்று சொல்லனும் என சொல்கிறான்.

அவன் என்ன சொல்ல போகிறான் என அறியாத கயல், சீக்கிரம் சொல்லு எனக்கு நேரமாகிறது என்கிறான். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எழிலுக்கு கயல் அதிர்ச்சியை தந்தார்.

கன்னத்தில் அறைந்த கயல்

காரணம் கயல், சரவண வேலுவின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார். இதையடுத்து. சரவண வேலுவின் நோக்கத்தைப் பற்றி எழில் கூறியது சரிசான் என மனதிற்குள் பேசிக் கொள்கிறாள்.

கயல், சரவண வேலுவை எதற்காக அடித்தார். அடி வாங்கும் அளவிற்கு சரவண வேலு என்ன சொன்னார்? என்பதை இன்றைய கயல் எபிசோடில் பார்க்கலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.