திட்டம் நிறைவேறிய குஷியில் சிவசங்கரி.. அடுத்த நிமிஷமே வந்து நிப்பேன்.. சவால் விட்ட கயல்.. சீரியல் அப்டேட்
கயலின் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு சிவசங்கரி போட்ட திட்டம் நிறைவேறியதால், அவர் சந்தோஷத்தில் இருக்கிறார்.

தன்னை அறைந்த கயலை பழிவாங்குவதே நோக்கமாகக் கொண்டிருந்த சிவசங்கரி, கயலிடமிருந்து எழிலைப் பிரித்து எப்படியாவது தீபிகாவிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களைத் தீட்டினார். ஆனால், அத்தனையும் தகர்த்து எறிந்து கயலும் எழிலும் பலகட்ட போராட்டங்களுக்கு மத்தியில் கல்யாணம் செய்து கொண்டனர்.
அம்மாவுடன் சண்டை
இதற்கிடையில், கயலின் சொந்த ஊருக்கு சென்றபோது, தன் அம்மா கயலுக்கு எதிராக செய்த அத்தனை சதிகளையும் அறிந்த எழில் அதிர்ச்சி அடைந்தார். அத்தோடு நில்லாமல் அதுபற்றி கேள்வி எழுப்பி தன் அம்மாவிடம் சண்டையும் போட்டார்.
ஆறுதல் சொன்ன எழில்
இதையடுத்து ஆத்திரம் தாங்க முடியாத எழில், இனி நான் உங்கள் மகனே இல்லை எனக் கூரி கயலுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அப்போது, பணத்திற்கு ஆசைப்பட்டு தான் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டங்குற பேர் மாறி என் வெற்றிக்கு பின்னாடி நீ இருக்கங்குற பேர் மட்டும் தான் இருக்கனும் என எழில் கயலுக்கு ஆறுதல் சொல்கிறான்.
