ஆனந்திக்கு ஹாஸ்டலில் நடந்த கொடூரம்.. மிருகமாய் மாறிய மித்ரா.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
போட்டியில் ஜெயித்து டைலராக மாறிய ஆனந்தியை கம்பெனிக்கு வரவிடாமல் தடுக்க மிகவும் கீழ்த்தரமாக திட்டத்தை தீட்டி ஆனந்தியை பழிவாங்கியுள்ளார் மித்ரா.
கிராமத்தில் உள்ள தனது குடும்ப கஷ்டத்தை போக்க கார்மெண்ட்ஸ் பணியில் சேர்கிறார் ஆனந்தி. இவரை பட்டிக்காடு என கிண்டல் செய்யும் கார்மெண்ட்ஸ் சூப்பர் வைசர் கருணாகரணும், அவருடன் ஹாஸ்டலில் இருக்கும் மித்ராவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம் தான்
மட்டம் தட்டும் கருணாகரன்
இதனால், ஆரம்பத்தில் இருந்தே ஆனந்தியை இந்தக் கம்பெனியில் இருந்து வெளியேற்ற பல முயற்சிகளை செய்கின்றனர். அதுமட்டுமின்றி, கார்மெண்ட்ஸில் டைலர் வேலைக்கு வந்த ஆனந்தியை மட்டம் தட்டி வேறு வேலைக்கு அமர்த்துகிறார். இவை எதுவும் அறியாமல் இருந்த கம்பெனியின் ஒனர் மகேஷிற்கு மெல்ல மெல்ல ஆனந்தி மேல் காதல் வந்தது. இதை தன் தோழி மித்ராவிடம் சொல்ல, அவள் மேலும் ஆனந்தி மீது கோவமடைகிறார்.
சதித் திட்டங்கள்
ஆனந்தியையும் மகேஷையும் பிரிக்க வேண்டும். ஆனந்திக்கு துணையாக நிற்கும் அன்புவை திட்டம் தீட்டி கம்பெனியில் இருந்தே வெளியேற்றினார். பின், அன்பு, ஆனந்தி, மகேஷ் கூட்டணியை உடைக்க பல்லவேறு திட்டங்களைத் தீட்டிய நிவையில், தற்போது புதிய பிரச்சனை வந்துள்ளது.
கம்பெனியில் இருந்து வெளியேற்றப்பட்ட அன்புவை மகேஷ் மீண்டும் கம்பெனிக்கு வர சொன்னார். அப்போது, ஆனந்தி, அன்புவிற்குள் காதலை உருவாக்க வேண்டும் என நினைத்த மித்ராவும் கருணாகரனும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனந்திக்கு வேலை தெரியாது
தற்போது, கம்பெனியில் துணி தைக்க வந்த ஆனந்தியை ஏன் அந்த வேலைக்கு அமர்த்தவில்லை என அன்பு கேள்வி கேட்கிறார். இதனால் கடுப்பான கருணாகரன் பட்டிக்காட்டில் ஜாக்கெட் தைத்து வந்தவளுக்கு எப்படி இந்த வேலை எல்லாம் தெரியும் என கேவலமாக பேசுகிறார். இதனால் கோபமடைந்த மகேஷ், கார்மெண்ட்சிஸ் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுக்கும் ஆனந்திக்கும் போட்டி வைத்தனர். இதில் கருணாகரன் சூழ்ச்சியையும் மீறி ஆனந்தி வெற்றி பெற்றாள் .
மித்ராவிற்கு சவால் விட்ட கருணாகரன்
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மித்ரா, கருணாகரனின் செயலால் கோவமடைந்து கத்தினார். இதனால் ஆத்திரமன கருணாகரன், ஆனந்தி உங்க ஹாஸ்டல்ல தான இருக்கா. உங்களால முடிஞ்சா அவள ஒரு நாள் கம்பெனிக்கு வர விடாம பண்ணுங்க பாப்போம் என மித்ராவிடம் சவால் விடுகிறான். இதை ஏற்றுக் கொண்ட மித்ரா ஆனந்திக்கு எதிரான திட்டத்தை யோசிக்கத் தொடங்கினாள்.
மித்ராவின் கொடூர செயல்
இதையடுத்து, இரவு ஆனந்தி ஹாஸ்டல் பாத்ரூமில் இருப்பதை அறிந்த மித்ரா, அவரது நண்பர்கள் துணையுடன் ஆனந்தி இருக்கும் பாத்ரூம் அறையின் கதவை தட்டினாள். பின் ஆனந்தி வருவதற்குள் வெளியில் சோப்பு நுரை தண்ணீரை கொட்டிவிட்டு தப்பிச் சென்றாள்,
தன்னை கூப்பிடும் சத்தம் கேட்ட ஆனந்தி கீழே கால் வைக்கும் போது வழுக்கி விழுந்து கையில் பயங்கரமாக அடிபட்டுள்ளது. இதனால், எழுந்து நிற்க முடியாமல் பயங்கரமாக கத்தி அழுதாள். ஆனந்தியின் குரலைக் கேட்டு அந்தப் பக்கம் வந்த வார்டன் ஆனந்தியை காப்பாற்றினார்.
சண்டையிட்ட மித்ரா
பின் ஆனந்தி இப்படி கீழே விழுந்ததற்கு மித்ராவும் அவரது நண்பர்களும் தான் காரணம் என ஆனந்தியின் நண்பர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு மித்ரா மறுப்பு தெரிவித்து சண்டையிட்டாள். இதையடுத்து ஆனந்தி அடுத்த நாள் வேலைக்கு சென்றாளா? மித்ரா அவளது சவாலில் ஜெயித்தாளா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
டாபிக்ஸ்