கருணாகரனின் சூழ்ச்சியில் சிக்கும் ஆனந்தி.. எடுத்த சபதத்தை முடிப்பாளா? சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
கிராமத்தில் இருந்து வந்த ஆனந்திக்கு கார்மெண்ட்ஸ் துணிகளை தைக்க தெரியாது என கருணாகரன் கூறியதால் ஆத்திரமடைந்த ஆனந்தி வேகவேகமாக துணிகளை தைத்து வருகிறாள்.
சிங்கப்பெண்ணே சீரயலில் கிராமத்தில் உள்ள தனது குடும்ப கஷ்டத்தை போக்க கார்மெண்ட்ஸ் பணியில் சேர்கிறார் ஆனந்தி. இவரை பட்டிக்காடு என கிண்டல் செய்யும் கார்மெண்ட்ஸ் சூப்பர் வைசர் கருணாகரணும், அவருடன் ஹாஸ்டலில் இருக்கும் மித்ராவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம் தான்.
மட்டம் தட்டும் கருணாகரன்
இதனால், ஆரம்பத்தில் இருந்தே ஆனந்தியை இந்தக் கம்பெனியில் இருந்து வெளியேற்ற பல முயற்சிகளை செய்கின்றனர். அதுமட்டுமின்றி, கார்மெண்ட்ஸில் டைலர் வேலைக்கு வந்த ஆனந்தியை மட்டம் தட்டி வேறு வேலைக்கு அமர்த்துகிறார். இவை எதுவும் அறியாமல் இருந்த கம்பெனியின் ஒனர் மகேஷிற்கு மெல்ல மெல்ல ஆனந்தி மேல் காதல் வந்தது. இதை தன் தோழி மித்ராவிடம் சொல்ல, அவள் மேலும் ஆனந்தி மீது கோவமடைகிறார்.
சதித் திட்டங்கள்
ஆனந்தியையும் மகேஷையும் பிரிக்க வேண்டும். ஆனந்திக்கு துணையாக நிற்கும் அன்புவை திட்டம் தீட்டி கம்பெனியில் இருந்தே வெளியேற்றினார். பின், அன்பு, ஆனந்தி, மகேஷ் கூட்டணியை உடைக்க பல்லவேறு திட்டங்களைத் தீட்டிய நிவையில், தற்போது புதிய பிரச்சனை வந்துள்ளது.
கம்பெனியில் இருந்து வெளியேற்றப்பட்ட அன்புவை மகேஷ் மீண்டும் கம்பெனிக்கு வர சொன்னார். அப்போது, ஆனந்தி, அன்புவிற்குள் காதலை உருவாக்க வேண்டும் என நினைத்த மித்ராவும் கருணாகரனும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனந்திக்கு வேலை தெரியாது
தற்போது, கம்பெனியில் துணி தைக்க வந்த ஆனந்தியை ஏன் அந்த வேலைக்கு அமர்த்தவில்லை என அன்பு கேள்வி கேட்கிறார். இதனால் கடுப்பான கருணாகரன் பட்டிக்காட்டில் ஜாக்கெட் தைத்து வந்தவளுக்கு எப்படி இந்த வேலை எல்லாம் தெரியும் என கேவலமாக பேசுகிறார். இதனால் கோபமடைந்த மகேஷ், கார்மெண்ட்சிஸ் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுக்கும் ஆனந்திக்கும் போட்டி வைத்தனர். இதில் கருணாகரன் சூழ்ச்சி செய்து தையல் மிஷினில் கோளாறு செய்துள்ளான். இதனால், ஆனந்தி வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கருணாகரனின் சூழ்ச்சியில் இருந்து ஆனந்தி தப்பிப்பாளா? போட்டியில் வெற்றி பெறுவாளா? அன்பு மற்றும் மகேஷ் எடுக்கும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வீட்டை விட்டு போன அன்பு
முன்னதாக, ஆனந்தியை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் தங்க வைத்ததால் கோவத்தில் இருந்த அவரது அம்மா அன்புவை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்.
இந்நிலையில், அன்பு, ஆனந்தியை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்ததை பார்த்த மித்ரா அதுகுறித்து மகேஷின் அம்மாவிற்கு தகவல் கொடுக்கிறார். அப்போது, அன்புவிற்கும் ஆனந்திக்கும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. இதுபற்றி நாம் மகேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என இருவரும் திட்டம் தீட்டுகின்றனர்.
காத்திருக்கும் மித்ரா
அதன்படியே, மித்ரா கார்மெண்ட்சில் வேலை செய்யும் அன்புவும் ஆனந்தியும் எப்போது தனியாக பேசுவார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார். அத்துடன் சமயம் பார்த்து மகேஷிடம் இந்தத் தகவலைக் கூறவும் தவித்து வருகிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்