நான் இனிமேல் உங்க பையனே இல்ல.. கயலுக்காக எல்லாத்தையும் தூக்கிப் போட்ட எழில்.. கயல் சீரியல் அப்டேட்
கயலை தனது மருமகளாக ஏற்கக் கூடாது என தீட்டிய திட்டங்கள் அனைத்தும் எழிலுக்கு தெரிய வந்ததால், தன் அம்மா மேல் எழில் கோவமாக உள்ளார்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த கயல், தன் வீட்டில் இருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் எழிலை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் என எழிலின் அம்மா சிவசங்கரி எழிலிடம் நேரடியாக கூற முடியாமல் வேறு வேறு வடிவில் பேசி வந்தார்.
சிவசங்கரி திட்டத்தை அறிந்த எழில்
இதையடுத்து, அவர் தன் வீட்டிற்கு தீபிகா மருமகளாக வரவேண்டும் என்று நினைத்து தீபிகா மற்றும் அவரது அப்பாவுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை தீட்டி எழில்- கயல் கல்யாணத்தை நிறுத்த நினைத்தார். ஆனால். இவர்கள் போட்ட அனைத்து திட்டங்களும் தவிடுபொடியாக்கிய கயல், தான் உருகி உருகி காதலித்த எழிலை கல்யாணம் செய்தார்.
கடத்தலில் தெரிய வந்த உண்மை
இதுபற்றி எதுவும் அறியாத எழில், தன் அம்மா மேல் பயங்கரமான அன்பு வைத்திருந்தார். ஆனால், கயலின் சொந்த ஊருக்கு சென்ற போது, எழிலை தீபிகா கடத்தி மிரட்டிய சமயத்தில் தனது அம்மா தீபிகாவுடன் சேர்ந்து தனக்கு எதிராக எத்தனை திட்டங்கள் தீட்டினர் எனவும், கயலை பழிவாங்க துடிப்பதை அறிந்தார். அதுவும் அவரது அம்மா சொல்லியே இதை எல்லாம் கேட்டதால் மனமுடைந்த எழில், நடந்தவை பற்றி எல்லாம் கயலிடம் கூறினார்.
அம்மாவிடம் சண்டையிட்ட எழில்
இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த எழிலும் கயலும் நேராக எழில் வீட்டிற்கு சென்றனர். அப்போது, எழிலால் அவரது அம்மாவுடன் சாதாரணமாக பேச முடியவில்லை. இதுபற்றி அவர் விசாரிக்கையில் கோவத்தை அடக்க முடியாமல் தன் அம்மாவிடம் கயலுக்கு எதிராக செயல்பட்டது குறித்து கேட்கிறார். முதலில் மறுத்த சிவசங்கரி, பின் கயல் நம் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் உன்னை திருமணம் செய்து கொண்டார் எனக் கூறியதை எழிலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வீட்டை விட்டு வெளியேறிய எழில்
இதனால், தனது அம்மாவுடன் சண்டை போட்டு இனி தான் உங்கள் பிள்ளையே இல்லை எனக் கூறி கயலை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
தனக்காக இத்தனை கஷ்டங்களைத் தாங்கும் எழிலுக்கு எப்படி கைமாறு செய்யப் போகிறேன் எனக் கூறி கயல் தவித்து நிற்கிறாள். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
பொங்கல் வைக்க புறப்பட்ட குடும்பம்
முன்னதாக கல்யாணம் முடிந்த கையோடு கயலின் சொந்த ஊருக்கு சென்று, அங்குள்ள கோயிலில் பொங்கல் வைக்க கயல் குடும்பத்துடன் எழிலும் செல்கிறார். அங்கு கயலின் அப்பா பெயரை சொல்லி நடக்கும் பல பிரச்சனைகளை சமாளித்து வந்த நிலையில்,சரவண வேலுவுடன் ஊர் சுற்றி பார்க்கச் சென்ற கயலுக்கும் எழிலுக்கும் ஆபத்து வருகிறது.
கத்திக்குத்துடன் சிகிச்சை
சரவண வேலு, திட்டம்போட்டு, கயலிடமிருந்து எழிலைப் பிரிக்க அடியாட்களை வைத்து எழிலை கத்தியால் குத்தினான். இதில் படுகாயமடைந்த எழில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.
அந்த சமயத்தில் கயல் எழிலுக்காக கோயிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு வர நினைத்து கிளம்பினார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தீபிகா எழிலை மருத்துவமனையில் இருந்து கடத்தினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்