Deadpool wolverine: ‘சும்மா அதிருதில்ல… ஓரம் போன ராயன்..பணமழையில் மார்வல்.. டெட்பூல் & வோல்வரின் வசூல் இவ்வளவா?
Deadpool wolverine: ‘டெட்பூல்’ மற்றும் ‘டெட்பூல் 2’ படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தை இயக்குநர் ஷான் லெவி இயக்கி இருந்தார். - டெட்பூல் & வோல்வரின் வசூல் இவ்வளவா?
'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன், ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது என்று அப்பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
சாதனை படைத்த 'டெட்பூல் & வால்வரின்'
வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரங்களை இணைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘டெட்பூல் & வோல்வரின். மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 34-வது படமான இந்தப்படம், கடந்த ஜூலை 26ம் தேதி வெளியாகி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
‘டெட்பூல்’ மற்றும் ‘டெட்பூல் 2’ படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தை இயக்குநர் ஷான் லெவி இயக்கி இருந்தார். மார்வெல் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப்படத்தில், வோல்வரினாக ஹியூ ஜேக்மேனும், டெட்பூலாக ரையான் ரெனால்ட்ஸூம் நடித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் ‘டெட்பூல் & வால்வரின்’ முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா?
ரூ.2,000 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படும் இந்தப்படமானது, முதல் வாரத்தில், இந்தியாவில் 83.28 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வசூலானது முன்பு வெளியான ‘டெட்பூல்’ மற்றும் ‘டெட்பூல் 2’ படங்களின் வசூலை விட அதிகமாம். ஆம், முன்னதாக வெளியான ‘டெட்பூல் 1’ 40. 79 கோடி ரூபாயும், 'டெட்பூல் 2' 69.94 கோடி ரூபாயும் வசூல் செய்திருந்தது.
உலகளவில் வசூல் எவ்வளவு தெரியுமா?
உலகளவில் பார்க்கும் போது, இந்தப்படம் முதல் வார இறுதியில் 3650 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது. ஆகையால் வரும் காலத்திலும், இந்தப்படம் நல்ல வசூலை பார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை மூலம் 2024ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக அளவு ஓப்பனிங்கை பெற்ற திரைப்படமாக ‘டெட்பூல் & வோல்வரின்’ மாறியிருக்கிறது.
சிறந்த கேமியோஸ், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் பல கமர்ஷியல் பொழுதுபோக்கு விஷயங்களுடன் இந்தப்படம் வெளியாகி இருப்பதால், மக்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக திரை வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் இந்தப்படத்திற்கு போட்டியாக தனுஷின் ராயன் களமிறங்கியது. அந்தப்படத்தின் வசூலையும் தெரிந்து கொள்ளலாம்!
இரண்டாவது முறையாக தனுஷ் இயக்குநராக களம் இறங்கி இருக்கும் ராயன் திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அவரின் 50 வது திரைப்படமாகவும் அமைந்திருக்கும் இந்தப்படத்தில், அவருடன் இணைந்து சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படம் இந்தியாவில் மட்டும் 47 கோடிக்கும் மேல் வசுல் செய்திருக்கும் இந்தப்படம் உலகளவில் 75 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்