நயன்தாரா டாக்குமென்டரி..மைக் டைசன் குத்து சண்டை லைவ் ஸ்டிரீமிங், சூப்பர் ஹீரோ படம்..! இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு விவரம்
நயன்தாரா டாக்குமென்டரி, பிரபு தேவா பேட்டராப் தவிர தமிழ் ஓடிடி ரிலீஸ் இந்த வாரம் இல்லை. அத்துடன் மைக் டைசன் குத்து சண்டை லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது, இதுதவிர ரசிகர்கள் எதிர்பார்த்த சூப்பர் ஹீரோ படமும், இந்திய சுதந்திர போராட்டம் பற்றிய வெப்சீரிஸும் வெளியாகிறது.
கடந்த வாரம் ஓடிடி பேன்ஸ்களுக்கு மிக பெரிய ட்ரீட்டாகவே அமைந்தது. புதிய படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் என மொத்தம் 26 கன்டென்ட்கள் வெளியாகின. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா, சமந்தா நடித்த சிட்டாடல் வெப் சீரிஸ் போன்றவை வெளியாகின.
இதைத்தொடர்ந்து இந்த வாரம் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் புதிய ரிலீஸ்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
நயன்தாரா டாக்குமென்டரி
லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா வாழ்க்கை மற்றும் அவரது திருமணத்தை பற்றி ஆவணப்படமாக உருவாகியிருக்கும் நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. அந்த நாள் நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால், அவரது பர்த்டே ட்ரீட்டாக ரசிகர்களுக்கு இந்த டாக்குமென்டரி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
பேட்ட ராப்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பிரபு தேவா நடிப்பில் வெளியான ஆக்ஷன் காமெடி படம் பேட்ட ராப். இந்த படத்தில் பிரபு தேவா ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்திருக்கும் படத்தை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நவம்பர் 12 முதல் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.
டெட்பூல் & வால்வரின்
ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் ரியான் ரெனால்ட்ஸ் நடித்த டெட்பூல், ஹக் ஜேக்மேன் நடித்தவால்வரின் படங்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த இரு சூப்பர் ஹீரோக்களும் இணைந்து நடிக்க காமெடி கலந்தஆக்ஷன் த்ரில்லர் படமாக டெட்பூல் அண்ட் வால்வரின் உருவாகியிருந்தது. உலகம் முழுவதும் இந்த கடந்த ஜூலை 26ஆம் தேதி வெளியானது. படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் $1.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அள்ளியது.
இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் நவம்பர் 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு உள்பட பிற தென்னிந்திய மொழிகளும் படம் வெளியாகியுள்ளது.
ஃப்ரீடம் அட் மிட்நைட்
ஸ்டுடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள ஃப்ரீடம் அட் மிட்நைட் என்ற இந்தி வெப்சீரிஸ் நேரடி ஓடிடி ரிலீஸாக சோனி லைவ் ஓடிடியில் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது.
லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடர், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைச் சுற்றியுள்ள கொந்தளிப்பான நிகழ்வுகளை ஆழமாக ஆராய்கிறது. இந்தி தவிர தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் இந்த வெப் சீரிஸ் ஸ்டிரீமிங் ஆகிறது.
ஜேக் பால் vs மைக் டைசன்
யூடியூபராக மாறிய தொழில்முறை குத்துச்சண்டை வீரரான ஜேக் பால் மற்றும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் ஆகியோர் நவம்பர் 15ஆம் தேதி டெக்சாஸின் ஆர்லிங்டனில் உள்ள AT&T ஸ்டேடியத்தில் டியூக் அவுட் செய்ய உள்ளனர்.
ஜேக் முன்னாள் ஹெவிவெயிட் உலக சாம்பியனை வெல்ல முடியுமா என்பதைப் பார்க்க ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. முதலில் ஜூலை 20ஆம் தேதி திட்டமிடப்பட்டு, பின்னர் தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஸ்டிரீம் ஆகவுள்ளது. இதை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
இந்த வாரம் ஓடிடியின் பிற ரிலீஸ்களின் லிஸ்ட்
- ஜோக்கர் ஃபோலி எ டியூக்ஸ் - புக் மை ஷோ
- கன்னர் - பிரைம் விடியோ
- எமிலியா பெரெஸ் - நெட்பிளிக்ஸ்
- ஹாட் ஃப்ரோஸ்ட்ரி - நெட்பிளிக்ஸ்
- தி வாட்சர்ஸ் - ஜியோ சினிமா
- ஆபரேஷன் பிளட் ஹன்ட் - லயன்ஸ்கேட்
- ஸ்பிரிண்ட் சீசன் 2 - நெட்பிளிக்ஸ் ஆவணப்படம்
- கிராஸ் - அமேசான் பிரைம் சீரிஸ்
- சைலோ சீசன் 2 - ஆப்பிள் டிவி சீரிஸ்
- தி டே ஆஃப் தி ஜாக்கல் - ஜியோ சிரீஸ்
பிற மொழிகள்
- தி லாஸ்ட் சில்ட்ரன் (ஸ்பானிஷ்) - நெட்பிளிக்ஸ்
- சிஸ்டர்ஸ் பாட் (ஸ்பானிஷ்) - ஜியோ சீரிஸ்
- பியாண்ட் குட் பை (ஜப்பானியம்) - நெட்பிக்ஸ் சீரிஸ்
- தி மதர் ஆஃப் பெங்குவின் (போலந்து) - நெட்ஃபிக்ஸ் சீரிஸ்
டாபிக்ஸ்