Deadpool 3: ரயான் ரெணால்ட்ஸ், ஹக் ஜேக்மேன் இணைந்து மிரட்ட இருக்கும் டெட்பூல் 3 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி-deadpool 3 trailer and other movie sneak peeks to release during super bowl 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Deadpool 3: ரயான் ரெணால்ட்ஸ், ஹக் ஜேக்மேன் இணைந்து மிரட்ட இருக்கும் டெட்பூல் 3 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

Deadpool 3: ரயான் ரெணால்ட்ஸ், ஹக் ஜேக்மேன் இணைந்து மிரட்ட இருக்கும் டெட்பூல் 3 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 06, 2024 09:15 PM IST

ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டெட்பூல் 3 ட்ரெய்லர் உள்பட இன்னும் சில படங்களின் ஸ்னீக் பீக் விடியோக்களும் சூப்பர் பவுல் 2024 நிகழ்வின்போது வெளியிடப்படவுள்ளது.

டெட்பூல் 3 படத்தில் ரயான் ரெணால்ட்ஸ், ஹக் ஜேக்மேன்
டெட்பூல் 3 படத்தில் ரயான் ரெணால்ட்ஸ், ஹக் ஜேக்மேன்

இந்த அமெரிக்கன் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட்டுடன், கண்களுக்கு விருந்தாக பல வன்னமயான நிகழ்வுகளும் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டில் ஹாலிவுட் பாடகியாக டெயிலர் ஷிஃப்ட் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் பவுல் நிகழ்வின்போது, உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டெட்பூல் 3 படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படவுள்ளது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ரயான் ரெணால்ட்ஸ் நடிப்பையும், லுக்கையும் காண பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பாராமவுண்ட் பிக்சர்ஸ் இணை நிறுவனமான சிபிஎஸ் டிவியில் சூப்பர் பவுல் ஒளிபரப்பு தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே, இதுபோன்ற ட்ரெய்லர் அல்லது ஸ்னீக் விடியோக்கள் வெளியிட்டு ஒரே நேரத்தில் விளையாட்டு மற்றும் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 11ஆம் தேதி டெட் பூல் 3 ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் மட்டுமில்லாமல் வேறு சில படங்கள் தொடர்பான் ஸ்னீக் பீக் விடியோக்களும் ரசிகர்களை குஷிப்படுத்தலாம் என கூறப்படுகிறது. அதன்படி காமிக் அட்வெண்ச்சர் பாணியில் உருவாகி வரும் இன்சைடு அவுட் 2, குங்கு பாண்டா 4, டுவிஸ்டர்ஸ், இஃப், நக்கில்ஸ், ஏ குயிட் பிளேஸ்: டே ஒன், கிங்டம் ஆஃப் தி பிளேனட் ஆஃப் தி ஆப்ஸ் போன்ற படங்களின் ஸ்னீக் விடியோக்களும், ட்ரெயல்ர்களும் சூப்பர் பவுல் நிகழ்வின்போது வெளியாகும் என தெரிகிறது.

டெட்பூல் சீரிஸ் படங்கள்

மார்வெல் காமிக்ஸில் ஒரு அங்கமாக இருந்து வரும் டெட்பூல் கதாபாத்திரத்தை வைத்து அதே பெயரில் 2016இல் சூப்பர் ஹீரோ திரைப்படம் வெளியாகி உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கை போடு போட்டது. இந்த வெற்றி சூட்டிலேயே அடுத்த பாகமான டெட்பூல் இரண்டாம் பாகம் 2018இல் வெளியாகி, இந்த படமும் வசூலில் பட்டையை கிளப்பியது.

இதையடுத்து 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு டெட்பூல் 3 படம் இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இந்த பாகத்தில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் வோல்வரின் கதாபாத்திரத்தில் தோன்று ஹாக் ஜேக்மேனும் நடித்துள்ளார். 

இந்த பாகத்தில் டெட்பூலாக வரும் ரயான் ரொணால்ட்ஸ், வோல்வரினாக வரும் ஹக் ஜேக்மேன் இணைந்து மார்வெல் யுனிவெர்சில் வரலாற்றை மாற்றியமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், மார்வெல் சினிமா ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளார்கள்.

இந்த ஆண்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இருக்கும் டெட்பூல் 3 வரும் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த  பாகத்தை ஷான் லீவி இயக்கியுள்ளார். டெட்பூல் சீரிஸ் படங்களில் இடம்பிடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் இந்த பாகத்தில் இடம்பெறுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.