படத்த ரிவியூ பண்ணது குத்தமாயா? ஸ்கீரினில் நடக்கும் கொலைகள்.. ஸ்கோர் செய்தாரா சந்தானம்?; டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி?
தியேட்டருக்குள் செல்லும் சந்தானமும் அவரது குடும்பமும் படத்தின் காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களாக மாறுகிறார்கள்.

படத்த ரிவியூ பண்ணது குத்தமாயா? ஸ்கீரில் நடக்கும் கொலைகள்.. ஸ்கோர் செய்தாரா சந்தானம்.. டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி?
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் சினிமா விமர்சகராக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. இந்தப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், கெளதம் மேனன், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கதையின் கரு:
யூடியூப்பில் சந்தானம் வித்தியாசமாக விமர்சனம் செய்வதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் செல்வராகவன் விமர்சனம் செய்பவர்களை பேயாக வந்து கொலை செய்து வருகிறார். இந்த நிலையில் சந்தானத்தை குறிவைக்கும் செல்வராகவன் சந்தானம் மட்டுமல்லாது அவரது குடும்பமான தந்தை நிழல்கள் ரவி, தாய் கஸ்தூரி, தங்கை யாஷிகா ஆனந்த் ஆகியோரை ஒரு படத்தின் பிரீமியர் காட்சிக்கு அழைக்கிறார்.