தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Darshan Arrest Case: ‘கன்னட நடிகை பவித்ரா - தர்ஷனின் 2ஆவது மனைவி அல்ல’: தர்ஷனின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுப்பு!

Darshan Arrest Case: ‘கன்னட நடிகை பவித்ரா - தர்ஷனின் 2ஆவது மனைவி அல்ல’: தர்ஷனின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுப்பு!

Marimuthu M HT Tamil
Jun 16, 2024 05:12 PM IST

Darshan Arrest Case: கன்னட நடிகை பவித்ரா - தர்ஷனின் 2ஆவது மனைவி அல்ல என்று தர்ஷனின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Darshan Arrest Case: ‘கன்னட நடிகை பவித்ரா - தர்ஷனின் 2ஆவது மனைவி அல்ல’: தர்ஷனின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுப்பு!
Darshan Arrest Case: ‘கன்னட நடிகை பவித்ரா - தர்ஷனின் 2ஆவது மனைவி அல்ல’: தர்ஷனின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுப்பு!

ரேணுகா சாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோர் முக்கியக் குற்றவாளிகள் எனக்  காவல் துறையினர் சந்தேகித்து ஜூன் 11ஆம் தேதி கைது செய்துள்ளது. இருவரும் பத்து ஆண்டு காலமாக, திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்போது, தர்ஷனின் வழக்கறிஞர் அனில் பாபு, இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், பவித்ரா - தர்ஷனின் இரண்டாவது மனைவி எல்லாம் கிடையாது என்றும்; மேலும் அவர்கள் வெறும் நண்பர்கள் தான் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

'விஜயலட்சுமி தான் தர்ஷனின் ஒரே மனைவி':

தர்ஷனின் வழக்கறிஞர் அனில் பாபு, விஜயலட்சுமி தான் தர்ஷனின் திருமணமான ஒரே மனைவி என்றும் அழுத்தம் திருத்தமாக அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

அனில் பாபு கூறியதாவது, "பவித்ரா கவுடா இரண்டாவது மனைவி என்பது முற்றிலும் தவறானது. அவள் ஒரு தோழி மட்டுமே. அவர்கள் இணை நட்சத்திரங்களாக இருந்தனர். இப்போதும் அவர்கள் ஒரு நட்பு உறவையே கொண்டிருக்கின்றனர். வேறு எதுவும் இல்லை. தர்ஷனின் ஒரே மனைவி விஜயலட்சுமி மட்டும் தான். இதற்கிடையே எந்த நேரத்திலும் இரண்டாவது திருமணம் நடந்திருக்கவில்லை. மேலும், ரேணுகா சாமி கொலைக்கும் தர்ஷனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'’ என்றும் அனில் கூறினார்.

'குற்றம் நடந்த இடத்தில் தர்ஷன் இல்லை':

 குற்றம் நடந்த இடத்தில் நடிகர் தர்ஷனின் ஜீப் இருந்ததற்கான சி.சி.டி.வி காட்சிகளைப் பற்றி பேசிய வழக்கறிஞர் அனில் பாபு, ’’தர்ஷன் காரில் இல்லை. அங்கு தர்ஷன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதையும் காவல்துறையினர் வழங்கவில்லை. இந்த விவகாரம் குறித்து தர்ஷனுக்கு எதுவும் தெரியாது’’ என்றும் அனில் கூறினார்.

மேலும் வழக்கறிஞர் அனில் பாபு, "அந்த கார் தர்ஷனுக்கு சொந்தமானதா என்பது முதல் கேள்வி. அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இரண்டாவதாக, காருக்குள் தர்ஷன் இருந்தார் என்று போலீசார் கூற வேண்டும். அது மிக முக்கியமானது. இந்த வழக்கில் தர்ஷனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, அவர் யாருக்கு பணம் கொடுத்தாரா அல்லது எவ்வளவு கொடுத்தார் என்ற கேள்வி எழவில்லை. அவருக்கு அந்த விஷயம் பற்றி எதுவும் தெரியாது" என்றார்.

தர்ஷன் - பவித்ரா:

கன்னட நடிகர் தர்ஷன் - விஜயலட்சுமி தம்பதிக்கு, வினிஷ் என்ற மகன் உள்ளார்.  அப்படியிருக்க, இந்த ஆண்டு ஜனவரியில், பவித்ரா, தர்ஷனுடன் கிளிக் செய்த படங்களின் ரீலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "ஒரு தசாப்தம் கீழே.. என்றென்றும் பயணிக்க வேண்டும். எங்கள் ரிலேஷன்ஷிப்புக்கு 10 ஆண்டுகள் ஆகிறது. நன்றி" என்று எழுதியிருந்தார். 

இந்தப் பதிவு வைரலானதும், பவித்ரா மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக, தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி மிரட்டல் விடுத்தார். இதற்குப் பதிலளித்த பவித்ரா, "எந்தவொரு தனிப்பட்ட தேவைகளுக்காகவும், இப்படி சமூக வலைதளத்துக்கு இங்கு வரவில்லை. இது 10 ஆண்டுகளாக தூய அன்பு மற்றும் கவனிப்பைப் பற்றியது. இது அவ்வளவு எளிதானது அல்ல" என்று சமூக ஊடகங்களில் பதில் கூறியிருந்தார். 

மேலும், விஜயலட்சுமிக்கு தங்களைப் பற்றி தெரியும் என்றும்; எனவே, அவர் இப்போது அச்சுறுத்தலாக இருப்பதைப் பார்ப்பது “வேதனை” ஆகவுள்ளது. என்னை நேசிக்கும் ஆணுடன் மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்துள்ளேன்’’ என்று பதில் அளித்திருந்தார்.

ரேணுகா சாமி கொலை வழக்கு:

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் சுமனஹள்ளி அருகே உள்ள சாக்கடையில் சாப்பாடு டெலிவரி செய்யும் ஊழியரால் ரேணுகா சாமி என்ற பெண் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்தார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டிருந்தது. நிதித் தகராறில் அவரைக் கொன்றதாகக் கூறி, இருவர் முதலில் போலீஸில் சரணடைந்தனர். 

இருப்பினும், கொலையில் தர்ஷன் மற்றும் பவித்ராவின் தொடர்பு இருப்பதாகக் கூறிய காவல்துறை அவர்களைக் கைது செய்து விசாரணை செய்தது. ரேணுகா சாமி, பவித்ராவுக்கு தவறான செய்திகளை அனுப்பி, தர்ஷனை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா ஆகியோர் கூட்டாக சேர்ந்து, ஆட்களை ஏவி, கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கில், இருவரும் ஜூன் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார்கள். 

 

WhatsApp channel

டாபிக்ஸ்