Daniel Craig: பலான காட்சிகள் ஷுட்டிங்கின் போது..பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் சென்ன விஷயத்தை பாருங்க
பலான காட்சிகள் ஷுட்டிங்கின் போது நீங்கள் எதிர்பார்க்குற ஒரு விஷயமும் நடக்காது என்று ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் கூறியுள்ளார். அவர் தற்போது கே ரெமான்ஸ் படமான குயிர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஹாலிவுட் சினிமாக்களில் கற்பனையான மாஸ் கதாபாத்திரமாக திகழும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டேனியல் கிரேக். 2006இல் வெளியான கேசினோ ராயல் தொடங்கி தற்போது நே டைம் டு டை வரை இதுவரை 5 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவர் நடித்துள்ளார்.
பாண்ட் பட ஹீரோக்கள் என்றாலே அதிரடி ஆக்ஷன் முதல் ஹீரோயினுடன் கட்டிப்புடி, லிப்லாக் ரொமான்ஸ் வரை பட்டையை கிளப்புவார்கள். அந்த வகையில் டேனியில் கிரேக்கும் தனது பாண்ட் படங்கல் திகட்ட திகட்ட ஆக்ஷனும், திகட்டாத வகையில் ரெமான்ஸ், பலான காட்சிகளிலும் பட்டையை கிளப்பியிருப்பார்.
தன் பாலின ஈர்ப்பு படம்
இதையடுத்து கே ரெமான்ஸ், தன் பாலின ஈர்ப்பை பின்னணியாக வைத்து உருவாகும் குயிர் என்ற படத்தில் நடித்து வருகிறார் டேனியல் கிரேக். இந்த படத்தின் முதல் புரொமோ கடந்த 3ஆம் தேதி வெளியானது. படத்தின் கதைக்கு ஏற்ப விரசமான பலான காட்சிகளும் இதில் இடம்பிடித்துள்ளன. இந்த காட்சிகள் படமாக்கிய விதம் பற்றி டேனியல் கிரேக்கும் வெளிப்படையாக பேசியுள்ளது.
வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 இல் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, திரைப்படங்களில் பாலியல் காட்சிகளை படமாக்குவது பற்றி டேனியல் கிரேக் பேசியுள்ளார்.
பாலின காட்சிகள் உருவாக்கம்
அதில், திரைப்படங்கள் பலான காட்சியை படமாக்குவதில் அந்தரங்கமான விஷயம் என்பது எதுவும் இல்லை. அது போன்ற காட்சிகளில் நடிக்கும்போது எங்களால் முடிந்தவரை உணர்ச்சிகளை வரவழைக்கூடியதாகவும். உண்மையானதாகவும் இயற்கையாகவும் மாற்ற விரும்புவோம்.
குயிர் படத்தில் ட்ரூவுடன் பணியாற்றியது அற்புதமான, அனுபவம். அழகான அவருடன் அந்த காட்சிகளில் நடித்தபோது, சிரிப்புதான் வந்தது. நாங்கள் அந்த தருணத்தை வேடிக்கையாக்க முயற்சித்தோம்.
நான் பார்க்க விரும்பிய, நடிக்க விரும்பிய படமாக குயிர் அமைந்துள்ளது." என்றார்.
டேனியல் கிரேக் கடைசியாக நடித்த பாண்ட் படமான நோ டைம் டூ டை கடந்த 2021இல் வெளியானது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 700 மில்லியன் அமெரிக்கா டாலருக்கு மேல் வசூலித்தது. இவர் நடித்த பாண்ட் படங்களில் ஸ்கைஃபால் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது.
குயிர் பற்றி
1985ஆம் ஆண்டு வில்லியம் எஸ். பர்ரோஸின் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஜஸ்டின் குரிட்ஸ்கேஸின் திரைக்கதையிலிருந்து லூகா குவாடாக்னினோவால் குயிர் படம் இயக்கப்பட்டது.
1940களில் மெக்ஸிகோ நகரத்தின் பின்னணியில் கதை அமைந்திருக்கும். ஒரு அமெரிக்க வெளிநாட்டவரைப் பின்தொடர்ந்து செல்லும் படம், அந்த ஒரு இளைஞருடன் மோகம் கொள்கிறார். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் காமெடி கலந்து கூறிப்பட்டுள்ளது.
2024இல் வெனிஸ் திரைப்பட விழாவில் குயிர் திரைப்படம் கோல்டன் லயனுக்கான போட்டியில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் லூகா மற்றும் லோரென்சோ மிலி இணைந்து தயாரித்துள்ளனர் மற்றும் ஜேசன் ஸ்வார்ட்ஸ்மேன், லெஸ்லி மான்வில்லே, ஹென்றி ஜகா, ட்ரூ ட்ரோஜ், ஏரியல் ஷுல்மேன், ஒமர் அப்பல்லோ, மைக்கேல் பொர்ரெமன்ஸ், ஆண்ட்ரா உர்சுட்டா, டேவிட் லோவரி, லிசாண்ட்ரோ அலோன்சோ மற்றும் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்