102 டிகிரி காய்ச்சலோட டான்ஸ்.. அஜித் சின்சியாரிட்டியை புகழ்ந்த கல்யாண் மாஸ்டர்..
விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த பாடல் உருவான விதம் குறித்து பல முக்கிய தகவல்களை கூறியுள்ளார் கல்யாண் மாஸ்டர்.
விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த பாடல் உருவான விதம் குறித்து பல முக்கிய தகவல்களை கூறியுள்ளார் கல்யாண் மாஸ்டர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார்- த்ரிஷா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பே மிகவும் தாமதமாக நடந்து வந்ததால் இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது.
கிளாஸி நடனம்
இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் சில நாட்களுக்கு முன் அனிருத் இசையில் விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிளும் வெளியானது.
சோனி மியூசிக் சவுத் வெளியிட்ட இந்த பாடலில் மிகவும் பேசப்பட்டது அஜித் குமாரின் நடனம் தான். கோட் சூட் உடையில், மிகவும் ஸ்டைலாகவும் கிளாசியாகவும் தன் நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார் அஜித்.
அந்த அசத்தலான ஸ்டைலுக்கும், கிளாசி நடனத்திற்கும் காரணமான நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர், சவதீகா பாடல் குறித்த சில தகவல்களை விகடன் பத்திரிகைக்கு வழங்கியுள்ளார்.
பாடலுக்கு ரொம்ப ஹைப்
அப்போது, துணிவு படத்திற்கு பின் 3 வருடம் கழித்து அஜித் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருப்பதால் பாடலுக்கான ஹைப் ரொம்ப அதிகமாகவே இருந்தது.
இதுக்கு முன்ன, அஜித் வேட்டி சட்டையில வந்து மாஸா ஆடுன பாட்டு எல்லாம் ஹிட். அதே மாதிரி தான் இதையும் எதிர்பாப்பாங்கன்னு நெனச்சோம். அதுனால இப்படி ஸ்லோவா, கிளாஸியா இருக்க பாட்டு எல்லாம் அவரோட ஃபேன்ஸ் ஏத்துப்பாங்களான்னு தெரியாம இருந்தோம்.
ஆனா பாட்டு வெளியானதுக்கு அப்புறம் அஜித்தோட டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம் அவ்ளோ வைராலா மாறிடுச்சி. ஒவ்வொருத்தரும் அஜித்தை கொண்டாடினாங்க. அந்த எனர்ஜி அவர விட்டு போகலன்னு எல்லாம் சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
102 டிகிரி காய்ச்சல்
இந்த பாட்டு வர சீன் ரொம்ப கிளாஸியா இருக்கும் அதனால இந்த பாட்டும் ரொம்ப கிளாஸியா இருக்க மாதிரி செட் பண்ணோம். இந்த பாட்டோட ஷூட்டிங் சமயத்துல அஜித்துக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது. நாங்க எல்லாம் அவர ரெஸ்ட் எடுக்க சொன்னோம்.
ஆனா அவரு எனக்காக இத்தன பேரோட வேலை கெட வேணாம்ன்னு சொல்லி, அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மாத்திரை போட்டுட்டு வந்து இந்த டான்ஸ் பண்ணாரு. எனக்காக 40 பேரோட டைம்ம நான் வேஸ்ட் பண்ண விரும்பலன்னும் அவர் சொன்னது எங்களால மறக்கவே முடியாது.
குட் பேட் அக்லி பாடல்
நான், விடாமுயற்சி மட்டும் இல்ல. குட் பேட் அக்லி படத்துலயும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் கொரியோகிராஃப் பண்ணிருக்கேன். அதுவும் உங்களுக்கு எல்லாம் ரொம்ப பிடிக்கும்ன்னு நம்புறேன்.
மகிழ் திருமேனிக்கு இந்த பாட்டோட டான்ஸ் ரொம்ப பிடிச்சிருந்தது. அவரும் அஜித் மாதிரி தான். ரொம்ப பேச மாட்டார். அவர் நினைக்குற செய்வார். வேலையில ரெண்டு பேருமே டெலிகேட்டா இருப்பாங்க.
அஜித்தோட கல்லூரி வாசல் படம் வந்த சமயத்துல இருந்தே ரெண்டு பேரும் பிரண்ட்ஸ். நான் டான்ஸ் மாஸ்டரா முதல் முதல்ல அறிமுகமானதே அவரோட உயிருக்கு உயிராக தான். ஆனா, இந்தப் படத்து அப்புறம் எனக்கு பெருசா வேலை இல்லாததை தெரிஞ்சு எனக்கு தீனா படத்துல சான்ஸ் கொடுத்தார். அந்த படத்துக்கு அப்புறம் தான் என் வாழ்க்கையே முன்னுக்கு வந்தது.
டாபிக்ஸ்