Jani Master: 6 மாதம் டார்சர் செய்யப்பட்ட மைனர் பெண் - பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை பிளான் போட்டு தூக்கிய காவல்துறை
Jani Master: தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை, இன்று ( செப் 19 ) ஹைதராபாத் காவல் துறையினர் பெங்களூரில் வைத்து கைது செய்து உள்ளனர்.

Jani Master: நடிகர் விஜய்யின் பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியவர் பிரபல ஜானி மாஸ்டர். இவர் மீது அவரது நடனக் குழுவில் பணியாற்றும் 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி, அண்மையில் புகார் ஒன்றை கொடுத்து இருந்தார்.
அதில், கடந்த 6 மாதங்களாக அவரது குழுவில் பணியாற்றிய வந்த தன்னை ஜானி மாஸ்டர், வெளிப்புற படப்பிடிப்பில் இருக்கும் போது நார்சிங்கில் இருக்கும் அவரது வீடு உட்பட பல இடங்களில் என்னை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப்பெண், மேலும் இந்த சந்தர்ப்பங்களில் அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமல்லாமல், தன்னை அடித்தும் காயப்படுத்தி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.