PaRanjith: ரணமான ரஞ்சித்..அப்படியே ஓடிரு சொன்னாங்க.." - அட்டக்கத்தி அசாலட் செய்த கதை!
PaRanjith: ஷூட்டிங் செய்த எல்லா நாட்களுமே காலை 7 மணிக்கு ஷாட் வைத்து விடுவார். அந்த படத்தில் தான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அறிமுகமானார். முதலில் சந்தோஷ் நாராயணனுக்கும், ரஞ்சித்திற்கும் பழக்கமே கிடையாது. நான்தான் சந்தோஷை ரஞ்சித்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். - அட்டக்கத்தி உருவான கதை!

PaRanjith: பிரபல தயாரிப்பாளரான சிவி குமார் தான் முதன்முறையாக தயாரித்த அட்டக்கத்தி திரைப்படம் குறித்தும், அதன் இயக்குநர் பா. ரஞ்சித்தும் குறித்தும், டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
இது குறித்து அவர் பேசும் போது, "ரஞ்சித் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர். இன்று வரை அவர் என்னிடம் அதே எளிமையோடு பழகிக் கொண்டிருக்கிறார். அட்டக்கத்தி திரைப்படம் எடுக்கும் போது, நான் ஒரு புது தயாரிப்பாளர் என்பதால், என்னை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக, ரஞ்சித் பார்த்து பார்த்து கவனமுடன் வேலை செய்தார்.
காலை 7 மணிக்கு ஷாட்
ஷூட்டிங் செய்த எல்லா நாட்களுமே காலை 7 மணிக்கு ஷாட் வைத்து விடுவார். அந்த படத்தில் தான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அறிமுகமானார். முதலில் சந்தோஷ் நாராயணனுக்கும், ரஞ்சித்திற்கும் பழக்கமே கிடையாது. நான்தான் சந்தோஷை ரஞ்சித்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.
