தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Crime Selvaraj Latest Interview About Kadhalar Dhinam Kunal Singh Suicide

Kunal Singh suicide: உள்ளே நுழைந்த மாடல்.. கண்மாறிய காதல்.. விட்டுச்சென்ற மனைவி..குணால் இறந்த கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 23, 2024 05:30 AM IST

ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் அவர் எதிர்பார்த்தது போல அமையாமல் போக, அசிஸ்டன்ட் எடிட்டராக வேலை செய்யலாம் என்று முடிவெடுத்தார். அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் அவருக்கு பெரிதாக திருப்தி இல்லை.

குணால் தற்கொலை!
குணால் தற்கொலை!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “குணால் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அந்த வெற்றியை வைத்துக்கொண்டு தன்னுடைய சினிமா கேரியரை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அவருக்கு தெரியவில்லை. 

ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் அவர் எதிர்பார்த்தது போல அமையாமல் போக, அசிஸ்டன்ட் எடிட்டராக வேலை செய்யலாம் என்று முடிவெடுத்தார். அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் அவருக்கு பெரிதாக திருப்தி இல்லை. 

இதனையடுத்துதான் அவர் பாம்பேவிற்கு சென்றார். அங்கு சித்தேஷ் பிலிம்ஸ் என்ற கம்பெனியில் துணை தயாரிப்பாளராக சேர்ந்தார். அந்த கம்பெனியில் இணைய உதவியவர் பாலகிரி என்பவர்தான். 

இப்படி சக தயாரிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த குணாலுக்கு, அந்த பேனரிலேயே ஒரு திரைப்படம் செய்யலாம் என்று யோசனை தோன்றுகிறது. 

இதனையடுத்து படத்தை கமிட் செய்து, அந்தப்படத்தில் தன்னை தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆட்களை தேடிக் கொண்டிருந்தார்கள். 

அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க லவீனா பங்கஜ் பாட்டியா என்ற மாடலை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் மாடலிங் துறையில் இருந்ததால், அவருக்கு நடிப்பு என்பது புதிதாக இருந்தது. இதனையடுத்து அவருக்கு தேவையான பயிற்சிகளை கொடுக்கிறார்கள். 

இதனை குணாலே முன் நின்று செய்கிறார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் காதலாக மாறியது. இந்த விஷயம் குணாலின் மனைவியான அனுராதாவுக்கு தெரிய வருகிறது. அவர் குணாவை கண்டிக்கிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. தொடர்ந்து அவரை விட்டு அவர் பிரிந்தும் செல்கிறார். 

பங்கஜூம் குணாலும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது. 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி வழக்கபோல நடந்த சண்டையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வாக்குவாதத்தில் பங்கஜ் பாத்ரூமிற்கு சென்று கதவை மூடி கொள்கிறார். ஆனால் நெடுநேரம் ஆகியும் குணாலிடம் இருந்து எந்த வித சத்தமும் வரவில்லை. இதனை எடுத்து சந்தேகப்பட்டு வெளியே வந்து பார்த்தபோது, குணால் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். அதனைதொடர்ந்து நடந்த விசாரணையில் அவரது உடலில் காயம் இருந்ததாக தெரிய வந்தது. இது தொடர்பாக பங்கஜூவிடமும் விசாரணை நடந்தது. சிபிஐ -யிடம் இருக்கும் இந்த வழக்கு அப்படியே இருக்கிறது” என்று பேசினார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்