Tamil News  /  Entertainment  /  Creator Of Rashmika Mandanna Deepfake Video Arrested Says Delhi Police

Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கியவர் கைது

Marimuthu M HT Tamil
Jan 20, 2024 05:36 PM IST

ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ ஆன்லைனில் தோன்றி நவம்பர் 6, 2023 அன்று வைரலானது.

After Rashmika, Alia Bhatt, Kajol, Sachin Tendulkar have become victims of deepfake videos.
After Rashmika, Alia Bhatt, Kajol, Sachin Tendulkar have become victims of deepfake videos. (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

டீப் ஃபேக்கில், ஜாரா படேல் என்னும் பெண்ணின் வீடியோவில் ராஷ்மிகாவின் முகம் பொருத்தப்பட்டு, அது கடந்த நவம்பர் 6, 2023 அன்று வைரல் ஆனது. இதற்கு அமிதாப் பச்சன் தொடங்கி உச்ச நடிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, ஆலியா பட், கஜோல், சச்சின் டெண்டுல்கர் தொடர்புடைய டீப்ஃபேக் வீடியோக்கள் வைரலாகின. 

ராஷ்மிகா குறித்த டீப் ஃபேக் வழக்கு, நவம்பர் முதல் விசாரணை நடந்து வருகிறது. ராஷ்மிகாவின் டீப் ஃபேக்கைப் பகிர்ந்த பல சமூக ஊடகப் பயனர்களை டெல்லி போலீசார் விசாரித்தனர். ஆனால் அதை உருவாக்கிய நபரை அடையமுடியாமல் தவித்தனர். இந்நிலையில் அந்த வீடியோவை உருவாக்கிய நபரை, ஆந்திராவில் வைத்து டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். 

சமீபத்தில், ஒரு கேமிங் செயலி சச்சின் டெண்டுல்கரின் வீடியோவை மார்ஃபிங் செய்து தவறான விளம்பர பிரசாரத்தைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மும்பை சைபர் போலீசார் இந்தச் செயலி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். 

மேலும் சச்சின், அந்த வீடியோ தனது இல்லையென்றும், அதைத் தான் விளையாடச்சொல்லவில்லையென்றும் எக்ஸ் தளத்திலேயே தெளிவுபடுத்தினார். 

அதுகுறித்து சச்சின் கூறியதாவது, "இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தின் பரவலான தவறான பயன்பாட்டைப் பார்ப்பது கவலையளிக்கிறது. இது போன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் மற்றும் பயன்பாடுகளை அதிக எண்ணிக்கையில் புகாரளிக்க கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடக தளங்கள் விழிப்புடனும் புகார்களுக்கு பதிலளிக்கவும் வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க அவர்களின் தரப்பிலிருந்து விரைவான நடவடிக்கை தேவையானது" என்று அப்போது சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார்.

போலியை எதிர்த்துப் போராட கடுமையான விதிகள்

இந்நிலையில் டீப்ஃபேக் வீடியோவை ஒழிக்க, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் கடுமையான விதிகளைக் கொண்டு வரும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

டீப் ஃபேக் வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்கள் ஒரு சிக்கலான பிரச்னையாக மாறி வருவதாகவும், சமூக வலைதளங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசும் தனது கண்காணிப்பை செய்யும் என்றும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.